logo
மகளிர் சுயஉதவிக் குழு மூலம்  வீடு வீடாக  சென்று காய்கனிகளை விற்பனை செய்ய ஏற்பாடு: புதுக்கோட்டை ஆட்சியர் பி.உமாமமகேஸ்வரி தகவல்

மகளிர் சுயஉதவிக் குழு மூலம் வீடு வீடாக சென்று காய்கனிகளை விற்பனை செய்ய ஏற்பாடு: புதுக்கோட்டை ஆட்சியர் பி.உமாமமகேஸ்வரி தகவல்

23/May/2021 11:00:32

புதுக்கோட்டை, மே: புதுக்கோட்டை மாவட்டத்தில் தளர்வற்ற முழுமுடக்கம் அமலில் இருக்கும் நாள்களில்  மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் வாகனத்தின் மூலம்  திங்கள்கிழமையிலிருந்து  வீடு வீடாக  சென்று காய்கறிகளை விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து  மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி வெளியிட்ட தகவல்: தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் உள்ள ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் வாயிலாக மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களை கொண்டு வீடு வீடாக வாகனத்தில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவிட்-19 தொற்றின் காரணமாக அதனை தடுக்கும் விதத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள முழுமுடக்கம் அமலில் உள்ள காரணத்தினால் 24.5.2021 முதல் 31.5.2021 வரை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் பகுதி அளவிலான கூட்டமைப்பின் வாயிலாக மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களை கொண்டு  வாகனம் மூலம் வீடு வீடாக காய்கறிகள் விற்பனை செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து   24.5.2021 முதல் 13 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 497 கிராம ஊராட்சிகள், புதுக்கோட்டை நகராட்சி, அறந்தாங்கி நகராட்சி மற்றும் 8 பேரூராட்சிகளில் செயல்படும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் வாயிலாக மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களை கொண்டு வீடு வீடாக வாகனத்தில் காய்கறிகள் விற்பனை செய்திட தற்பொழுது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் அனைவரும் எவ்வித சிரமமின்றி இந்த ஊரடங்கு காலங்களில் தங்கள் குடும்பங்களுக்கு தினசரி தேவைப்படும் காய்கறி வகைகளை தங்களுடைய வீடுகளிலிருந்தே மகளிர் சுயஉதவிக் குழுவினரிடமிருந்து   வாங்கி பயனடையலாம்.

Top