logo
பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி 7-வது நாளாக அரசு ஊழியர்கள் சாலை மறியல்: 65 பேர் கைது

பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி 7-வது நாளாக அரசு ஊழியர்கள் சாலை மறியல்: 65 பேர் கைது

08/Feb/2021 07:10:00

ஈரோடு, பிப்: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். பணியின்போது இறந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள் ,ஊர்ப்புற நூலகர்கள், எம் ஆர் பி செவிலியர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் சங்கத்தினர் அரசின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் நாள்தோறும்  சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரோடு தாலுகா அலுவலகம் முன்பு தொடர் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர் அதன்படி  7-வது நாளாக போராட்டம் தொடர்ந்தது. ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் திரண்ட அரசு ஊழியர்கள் அரசு ஊழியர் சென்னையில் திங்கள்கிழமை காலையில் ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து முழக்கங்களை  எழுப்பியபடி அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அதைத்தொடர்ந்து டவுன் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட  65 பேரை கைது செய்தனர்.

Top