logo
புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறை கேட்பு முகாம்: அரசின் சார்பில் ரூ.46.50 லட்சத்தில் நிவாரண உதவிகள் அளிப்பு

புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறை கேட்பு முகாம்: அரசின் சார்பில் ரூ.46.50 லட்சத்தில் நிவாரண உதவிகள் அளிப்பு

03/Feb/2021 03:14:59

புதுக்கோட்டை, பிப்:புதுக்கோட்டையில் ஏறத்தாழ 11 மாதங்களுக்குப்பிறகு அரசின் அனுமதி, வழிகாட்டுதல்படி நடத்தப்பட்ட மக்கள் குறை கேட்பு முகாமில் அரசின் சார்பில் பயனாளிகளுக்கு ரூ.46.50 லட்சத்தில் நிவாரண உதவிகளை மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி வழங்கினார்.

 புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைகேட்பு முகாமுக்கு தலைமை வகித்து பொதுமக்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி  கூறியதாவது:  தமிழக அரசின் ஆணைப்படி கோவிட்-19 கட்டுபாடுகளுக்கு பின் உரிய பாதுகாப்பு வழிமுறைகளுடன்  வாராந்திர மக்கள் குறை கேட்பு நாள் முகாம்  நடத்தப்படுகிறது.  இந்த முகாமில் பொதுமக்களிடமிருந்து விலையில்லா வீட்டுமனைப் பட்டா,  பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, வங்கி கடன், பசுமைவீடு,  சாலைவசதி, குடிநீர்வசதி, முதியோர் உதவித்தொகை, திருநங்கைகளுக்கான வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி 185 மனுக்கள் வரப்பெற்றன. வரப்பெற்ற மனுக்களை தொடர்புடைய அலுவலர்களிடம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு  வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 25 நபர்களுக்கு ரூ.4.5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், விபத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.42 லட்சம் நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர். 

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எம்.சந்தோஷ்குமார், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) கிருஷ்ணன் உள்பட அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.


Top