logo
வீட்டு மனைபட்டா கேட்டு  மலைவாழ்மக்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு

வீட்டு மனைபட்டா கேட்டு மலைவாழ்மக்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு

02/Feb/2021 07:35:39

ஈரோடு. பிப்: ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏறத்தாழ 11 மாதங்களுக்குப்பின் பொதுமக்களிடம் நேரடியாக  கோரிக்கை மனுக்களை வாங்கும் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.


இதில் மாவட்டம் முழுவதுமிருந்து ஏராளனமானோர்  திரண்டு வந்து தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

 ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் பர்கூர் மலை வாழ் மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது : நாங்கள் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப் பகுதியில் 25 குடும்பங்களுடன் வசித்து வருகிறோம். கூலி வேலை செய்து எங்கள் பிழைப்பை நடத்தி வருகிறோம்.எங்களுக்கென்று சொந்தமாக  வீடு கிடையாது. வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறோம்.  இந்நிலையில் கொரோனா  தாக்கம் காரணமாக எங்களுக்கு சரியான வேலை வாய்ப்பு இல்லாமல் வருமானமின்றி வறுமையில் தவித்து வருகிறோம்.இதனால்  வீட்டு வாடகையைக் கூட எங்களால் செலுத்த முடியவில்லை .எங்கள் 25 குடும்பத்திற்கும் வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் மனு கொடுத்துள்ளோம் ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை.எனவே தாங்கள் இந்தப்பிரச்னையில் மாவட்ட ஆட்சியர் கவனம் செலுத்தி  உடனடியாக  வீடு மனை பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனர்.


Top