logo
புதுக்கோட்டை அருகே வடமாடு ஜல்லிக்கட்டு:  போட்டி போட்டு களமிறங்கிய மாடுபிடி வீரர்கள்…

புதுக்கோட்டை அருகே வடமாடு ஜல்லிக்கட்டு: போட்டி போட்டு களமிறங்கிய மாடுபிடி வீரர்கள்…

13/Feb/2021 03:54:25

புதுக்கோட்டை, பிப்: புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா கீழப்பனையூர் தெற்கு குடியிருப்பு பகுதியில் உள்ள புனித அடைக்கல மாதா ஆலய அர்ச்சிப்பு விழாவை முன்னிட்டு ஆலய பின்புறம் உள்ள திடலில் வடமாடு ஜல்லிக்கட்டு சனிக்கிழமை  நடைபெற்றது.

 புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 11 வடமாடு காளைகள் கலந்து கொண்டன . இதில் புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 120 -க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.

 இந்த வடமாடு ஜல்லிக்கட்டு போட்டியில் ஒரு காளைக்கு 25 நிமிடம் என நேரம் ஒதுக்கி களத்தில் இறக்கி விடப்பட்டது. இதோ போல  காளையை அடக்குவதற்கு 9 பேர் கொண்ட குழுவும் களத்தில் அனுமதிக்கப்பட்டது.

நிகழ்ச்சி தொடங்கியதை அடுத்து காளையை அடக்குவதற்கு மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டுக்  சில காளைகளை அடங்கினர். சில காளைகள் மாடுபிடி வீரர்களின் கையில் சிக்காமல் வீரர்களை திணறடிக்க வைத்த காட்சி பார்வையாளர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.


 இதேபோன்று ஒவ்வொரு காளைகளுக்கும் 9 பேர் என குழுவாக இறக்கிவிடப்பட்டு வடமாடு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் காளைகளை அடக்கிய குழுவினருக்கும் மாடுபிடி வீரர்கள் கையில் சிக்காத காளைகள் உரிமையாளர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த போட்டியை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர். முன்னதாக மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே களத்தில் இறக்கி விடப்பட்டனர்.

Top