logo
மாணவர்களுக்கு வினா வங்கி கையேடு  பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடும் போது வழங்கப்படும்:அமைச்சர் செங்கோட்டையன்

மாணவர்களுக்கு வினா வங்கி கையேடு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடும் போது வழங்கப்படும்:அமைச்சர் செங்கோட்டையன்

31/Jan/2021 05:56:37

ஈரோடு, ஜன:பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடும் போதுமாணவர்களுக்கு வினா வங்கி கையேடு  வழங்கப்படும். 

 நீட், ஜேஇஇ போன்ற தேர்வுக்கான பாடதிட்டங்களை குறைப்பது குறித்து மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும். பிப்ரவரியில் பள்ளி திறப்பு குறித்து முதலமைச்சர் தான் முடிவெடுப்பார் என்றார்  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பெரியார்திடலில் கீரிப்பள்ளம் ஓடையில் கான்கிரீட் தளம் அமைத்து ரூ.11.5 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணியையும் கொடிவெரி அணையில் தடப்பள்ளி அரக்கன்கோட்டை ஆகிய இரு பாசன வாய்கால்கள் கான்கரீட் தளங்கள் அமைத்து ரூ.140 கோடியில் புனரமைக்கும் பணியையும் மாவட்ட ஆட்சியா சி.கதிரவன் முன்னிலையில்  பூமிபூஜையுடன் தொடங்கிவைத்த  அமைச்சர் செங்கோட்டையன்  பேசுகையில், கோபிசெட்டி பாளையத்தில் உள்ள கீரிப்பள்ளம் ஓடைகுறித்து பல்வேறு விமர்சனங்கள் வந்துள்ளது. இன்னும்  3 மாத காலங்களில் பணிகள் முடிவுற்ற பிறகுதான்  மக்களுக்கு தெரியவரும்.

கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் ஆர்ச் டூ ஆர்ச் வரையிலும் மின் விளக்குள் பொருத்தப்பட்டு கோபிசெட்டிபாளையம் ஒரு  நவீன நகரமாக  மாற்றம் செய்யப்படும். சாலையை கடக்கும் இடங்களில் தானியங்கி இயந்திர நடைபாதைகள் பொருத்தப்படும்.

தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால்களில் போதிய அளவு படித்துறைகள் அமைக்கப்படும். தடப்பள்ளி அரக்கன்கோட்டை கரைகளில் விவசாயிகள் இளைப்பாற கூடாரங்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: பொதுத்தேர்வு  எழுதும் மாணவர்களுக்கு வினா வங்கி கையேடு தேர்வு அட்டவணை வெளியிடப்படும் போது வழங்கப்படும். நீட்,  ஜேஇஇ போன்ற தேர்வுக்கான பாடதிட்டங்களை குறைப்பது குறித்து மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும்.

பிப்ரவரியில் பள்ளி திறப்பு குறித்து முதலமைச்சர் தான் முடிவெடுப்பார். பள்ளியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு என தனியாக ஊதியம் வழங்கப்படுவதில்லை பள்ளி தலைமையாசிரியரிடம் அதற்கான ஒரு குறிப்பிட்ட தொகை மட்டுமே வழங்கப்படு கிறது என்றார் அமைச்சர் செங்கோட்டையன்.

Top