logo
புதுக்கோட்டை திருவப்பூரில் மருத்துவ முகாமை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

புதுக்கோட்டை திருவப்பூரில் மருத்துவ முகாமை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

22/May/2021 12:16:00

புதுக்கோட்டை, மே: புதுக்கோட்டை நகராட்சி திருவப்பூரில்  கொரோனா தடுப்பூசி முகாமை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும்  ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டை நகராட்சிக்குள்பட்ட திருவப்பூரில்  மாவட்ட ஆட்சியர் பி, உமாமகேஸ்வரி, புதுகை எம்எல்ஏ- டாக்டர் வை. முத்துராஜா ஆகியோர் முன்னிலையில் உங்களைத்தேடி தடுப்பூசி திட்ட மருத்துவ முகாமை அமைச்சர்  ரகுபதி தொடங்கி வைத்து மேலும் கூறியதாவது:

தமிழக முதல்வரின் அறிவுறுத்திணங்க புதுக்கோட்டை மாவட்டத்தில்  கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால  அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் கிராமப் பகுதிகளில் பொதுமக்களிடையே  கோவிட் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் திருவப்பூரில்   உங்களைத்தேடி தடுப்பூசி என்ற திட்டம்  தொடங்கி வைக்கப் பட்டுள்ளது

இத்திட்டம் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு    கிராமத்திலும்  தொடர்ந்து நடத்தப்பட்டு  அதிக அளவிலான கோவிட் தடுப்பூசிகளை  பொதுமக்களுக்கு  செலுத்தி கோவிட் தொற்றில் இருந்து  பாதுகாக்கத்தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள்  கோவிட்  நோய் தொற்றைத் தடுக்கும்  வகையில் விழிப்புணர்வுடன்  இருந்து அறிகுறிகள் தெரிந்தவுடன்  பரிசோதனை  செய்து தொற்று  உறுதியானால் அருகில் உளள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை  எடுத்துக்கொள்ள   வேண்டும்.


நோயாளிகள் ஆரம்ப நிலையிலேயே கோவிட் தொற்றுக்கு உரிய சிகிச்சை எடுத்து கொண்டால் எளிதில்  குணமாகலாம். எனவே  கோவிட் தொற்றுடன் தாமதமாக மருத்துவமனைககு சிகிச்சைக்கு  வருவதை பொதுமக்கள்  தவிர்க்க வேண்டும். புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  ஏற்கெனவே  350 ஆக்சிஜன்   படுக்கைகள் இருந்தன. தற்போது  650 ஆக்சிஜன்  படுக்கைகள்   அமைக்கப்பட்டு  நோயாளிகளுக்கு சிகிச்சை  அளிக்கப்பட்டு  வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில்  புதிதாக அமைக்கப்பட்ட    கோவிட் கவனிப்பு  மையங்களில் தேவையானபடுக்கை வசதிகள் சிலிண்டர் ஆகசிஜன் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுதேவைக்கேற்ப  கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்தவும்  உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அமைச்சர் ரகுபதி.

இதில், வழக்குரைஞர் கே.கே.செல்லபாண்டியன், சுகாதார துணை இயக்குநர் கலைவாணி, நகராட்சி பொறியாளர் ஜீவாசுப்பிரமணியன்முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் நைனாமுகமது உள்பட பலர்  கலந்து கொண்டனர்.


 இதனை தொடர்ந்து    அமைச்சர் எஸ்.ரகுபதி   திருமயம் ஊராட்சி  ஒன்றியம், நற்சாந்துபட்டி , பனையப்பட்டி மற்றும் விராச்சிலை  ஆகியபகுதிகளில்  உள்ள  அரசு ஆரம்பசுகாதார நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள படுக்கை    வசதிகளை ஆய்வு  செய்து தேவையான மருத்துவ உபகரணங்களை  வழங்கிட உத்தரவிட்டார்.

 

Top