logo
கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது பின்பற்ற வேண்டும்: ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி

கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது பின்பற்ற வேண்டும்: ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி

19/Jan/2021 08:33:22

புதுக்கோட்டை, ஜன: பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளை  பள்ளி மாணவர்கள் தவறாது பின்பற்ற வேண்டும். சென்ற ஆண்டு வழங்கப்பட்ட  அரசின் இலவச பேருந்து பயண அட்டையை தற்போது பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் பி, உமாமகேஸ்வரி.

புதுக்கோட்டை வருவாய் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு, அரசு உதவிபெறும் மெட்ரிக், சுயநிதி, சிபிஎஸ்சி உயர்நிலை மற்றும் மேனிலைப்பள்ளிகளில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகள் 19.1.2021 முதல் தமிழக அரசின் ஆணைப்படி, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி செயல்பட உள்ளது. மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரிய கடந்த ஆண்டு வழங்கப்பட்ட அரசின் இலவச பேருந்து பயண அட்டையினையே பயன்படுத்திக்கொள்ளலாம்.

மாணவர்கள் பள்ளிக்கு வருகை தரும்பொழுது முகக்கவசம் அணிந்து வருகை தர வேண்டும். பள்ளியில் தெர்மல் ஸ்கேனர்  மூலம் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, கைகளை தூய்மையாக வைத்துக்கொள்ள கிருமி நாசினி வழங்கப்பட்டு, சமூக இடைவெளியை பின்பற்றி ஒவ்வொரு வகுப்பறையிலும் 25 மாணவர்களுக்கு மட்டும் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் பள்ளிக்கு வருகை தரும்பொழுது முழு பாதுகாப்புடனும், தகுந்த முன்னெச்சரிக்கையுடனும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிக்கு வருகை தர வேண்டும்;. மேலும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும்போது உரிய அறிவுரைகள் வழங்கி முகக் கவசத்துடன் பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப வேண்டும். 

மாணவர்களும் பெற்றோர்களும் பெருந்தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளவும், சமூக கடமையுடனும், தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது பின்பற்றி பள்ளி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்  ஆட்சியர் உமாமகேஸ்வரி.


Top