logo
ஓவிய திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாராட்டு:

ஓவிய திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாராட்டு:

06/Mar/2021 12:04:06

புதுக்கோட்டை,மாரச்: புதுக்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட தொடக்க நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு  நடைபெற்ற ஓவிய திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி த.விஜயலட்சுமி பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டினார்.


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மூலம் மாணவர்களின் தனித்திறனை வெளிக் கொணரவும்,புதுமையாக சிந்திக்க செய்யவும் , கலை மீது ஈடுபாடு கொள்ளச் செய்யவும் ,குழுமனப்பான்மையை ஏற்படுத்தவும் புதுக்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட  தொடக்க நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஓவியத்திருவிழா போட்டி பிப்ரவரி மாதம்  நடைபெற்றது..


இதில் 5 முதல் 8 வரை படிக்கும் மாணவ,மாணவிகள் வீட்டிலிருந்த படியே ஓவியங்களை வரைந்து தபால் மூலமாகவும்,வாட்ஸ் அப் மூலமாகவும் தாங்கள் பயிலும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அனுப்பி இருந்தனர்.தலைமையாசிரியர்கள் பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை தேர்வு செய்து புதுக்கோட்டை வட்டார வள மையத்திற்கு அனுப்பி வைத்திருந்தனர்.இவ்வாறு  பள்ளி அளவில்  முதல் மூன்று இடங்களை பிடித்த ஓவியங்களை பெற்று அதனை  வட்டார வளமைய பயிற்றுநர்கள் மூலம் சிறப்பாக வரைந்த  3 மாணவர்கள் ஒன்றிய அளவில் தேர்வு செய்யப்பட்டனர்.


இதில்  கோவில்பட்டி நகராட்சி நடுநிலைப்பள்ளி 8 ஆம் வகுப்பு ராஜகுமாரி முதலிடத்தையும், சடையபாறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5 -ஆம் வகுப்பு பயிலும் கனிஷ்கா இரண்டாமிடத்தையும்,சாந்தநாதபுரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 7 -ஆம் வகுப்பு படிக்கும் வர்ஷினி மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.. 

புதுக்கோட்டை ஒன்றிய அளவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி   கேடயங்களையும், சான்றிதழ்களையும் ,பதக்கங்களையும்  வழங்கிச் சிறப்பித்தனர்.நிகழ்வின் போது மாவட்ட திட்ட உதவி அலுவலர் இரவிச்சந்திரன் ,புதுக்கோட்டை வட்டாரக் கல்வி அலுவலர் பொன்னழகு,மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வீரப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Top