logo
ஈரோட்டில் மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தினருடன் காத்திருப்பு போராட்டம்

ஈரோட்டில் மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தினருடன் காத்திருப்பு போராட்டம்

11/Jan/2021 08:58:37

ஈரோடு, ஜன:  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு  தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தினருடன் காத்திருப்பு போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

கோரிக்கைகள்: கடந்த 2018 -ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சித்தோடு அடுத்த நல்லகவுண்டன் பாளையம் பகுதியில் 59 மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு சார்பில் இலவச வீட்டு மனை பட்டாவும், மொடக்குறிச்சி காகம் ஊராட்சியில் 26 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாவும் வழங்கப்பட்டது.

ஆனால் அரசு வழங்கிய இடத்தில்  குண்டும் குழியும், பாறையாக இருந்ததால்  கடந்த ஆண்டு நவம்பர் 23-ஆம் தேதி நல்ல கவுண்டம்பாளையம் பகுதியில் பட்டா வழங்க இடத்தில் மாற்றுத் திறனாளிகள் இடத்தை சீரமைத்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது குடும்பத்தினருடன் வந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதைத்தொடர்ந்து அதிகாரிகள்  அனைவரிடமும்  பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு அடுத்த நாளே சரி செய்வதாக கூறி சென்றனர்.  ஆனால் அந்தப் பணி பெயர் அளவுக்கே நடந்தது. முழுமையாக நடைபெறவில்லை என்றும், தங்களுக்கு  அரசு  பட்டா வழங்கிய இடத்தை அளவீடு செய்து சமன் செய்து கொடுக்க வேண்டும் அதுவரை எங்கள் காத்திருப்பு போராட் டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர்.

Top