logo
நீர்வரத்து அதிகரிப்பால் 96 அடியை எட்டிய பவானிசாகர் அணை

நீர்வரத்து அதிகரிப்பால் 96 அடியை எட்டிய பவானிசாகர் அணை

11/Jan/2021 08:53:17

ஈரோடு, ஜன: ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் விளை நிலங்களின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியிலும் நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

மேலும் கோவை மாவட்டம் பில்லூர் அணையிலிருந்து நீர் மின் உற்பத்திக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது .இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது . இதனால் பவானி சாகர் அணையின் நீர்மட்டம் கடந்த 3 நாட்களாக அதிகரித்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 95.96 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3936 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடியும், பாசனத்திற்காக கீழ்பவானி வாய்க்காலுக்கு 500 கன அடியும் என மொத்தம் 600 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

குண்டேரிப்பள்ளம் அணை 36.60 அடியாகவும், பெரும்பள்ளம் அணை 12.64 அடியாகவும், வரட்டுப்பள்ளம் அணை 30.28 அடியாகவும் உள்ளது. 

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக புறநகர் மாவட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து உள்ளது. குண்டேரி பள்ளம் அணை, பெரும்பள்ளம் அணை, வரட்டுப்பள்ளம் அணை போன்ற பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று 4-ஆவது நாளாக ஈரோடு பெருந்துறை ,கோபி, பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. பெருந்துறையில் அதிகபட்சமாக 16 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. ஈரோடு - 11, கோபி - 5, நம்பியூர் - 3, பவானிசாகர் - 1. 


Top