logo
கூகலூரில் பாரதிய ஜனதாகட்சியின் சார்பில் நடைபெற்ற நம்ம ஊரு பொங்கல் விழா

கூகலூரில் பாரதிய ஜனதாகட்சியின் சார்பில் நடைபெற்ற நம்ம ஊரு பொங்கல் விழா

11/Jan/2021 08:40:59

ஈரோடு ஜன: கோபிசெட்டிபாளையம் அருகேஉள்ள கூகலூரில் பாரதிய ஜனதாகட்சியின் சார்பில் நடைபெற்ற நம்ம ஊரு பொங்கல் விழாவில் ஒரே இடத்தில் ஆயிரம் பொங்கல் வைத்தும் பாராம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடத்தியும் கொண்டாடப்பட்டது.

 பாரதிய ஜனதாகட்சியின் மாநிலதலைவர் எல்.முருகன் பாரதிய ஜனதாகட்சியின் சார்பில் கிராமங்களில் பொங்கல் விழாகொண்டாடப்படவேண்டும் எனஅறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் தமிழகத்தில் பல இடங்களில் நம்ம ஊரு பொங்கல் கொண்டாட்டம் எனும் தலைப்பில் பாரதி ஜனதாகட்சியினர் பொங்கல் விழாவை கொண்டாடி வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம்அருகே உள்ள கூகலூரில் நடைபெற்றநம்ம ஊரு பொங்கல் விழாவில் மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து அழைத்து வரப்பட்ட பாரதிய ஜனதாகட்சியின் மகளிரணியினர் மண் பானையில் ஒரே இடத்தில் ஆயிரம் பொங்கல் வைத்தும் கும்மிடித்தும் குலவைஎழுப்பியும் பொங்கல் விழாவைகொண்டாடினர். 

மேலும் இந்தபொங்கல் விழாவில் பாராம்பரியகலைகளைபோற்றும் விதத்தில் மயிலாட்டம் கரகாட்டம் பொய்கால் குதிரைபோன்றகலைகளும் இடம் பெற்றிருந்தன. தொடர்ந்து சிலம்பாட்டம் வாள் சண்டைபோன்ற வீர விளையாட்டுகளும் நடைபெற்றது. பின்னர் பெண்கள் பங்கேற்றும் விளையாட்டுகள் விளையாட்டுகளும் ஆண்கள் பங்கேற்றும் விளையாட்டுகளும் நடைபெற்றது. 

கட்சியினரை வெளிஊர்களிலிருந்து அழைத்துவந்து பொங்கல் விழாநடத்தியது  இக்கிராமமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. பொங்கல் விழாவும்  உணவுகுடிநீர் கழிவறை போன்ற  அடிப்படைவசதிகளை முறையாக திட்டமிடுவதில் கவனம் செலுத்தாமல்  நடைபெற்றதால் விழாவிற்கு வந்திருந்த மகளிரணியினர் மற்றும் கட்சிதொண்டர்கள் சிரமத்திற்குள்ளாகினர். 

Top