logo
ஈரோடு மாவட்டத்தில் நாளை முதல் (புதன்கிழமை) 4 இடங்களில் மஞ்சள் ஏலம் நடைபெற உள்ளது

ஈரோடு மாவட்டத்தில் நாளை முதல் (புதன்கிழமை) 4 இடங்களில் மஞ்சள் ஏலம் நடைபெற உள்ளது

22/Jun/2021 10:34:46

ஈரோடு, ஜூன்: ஈரோடு மாவட்டத்தில் நாளை முதல் (புதன்கிழமை) 4 இடங்களில் மஞ்சள் ஏலம் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் அதிக அளவில் கொரோனா பரவல் உள்ள மாவட்டத்தில் ஈரோடு மாவட்டம் 2-ஆவது இடத்தில் உள்ளது. ஊரடங்கு, கட்டுப்பாடு போன்ற காரணங்களால்  கடந்த மே மாதம் 10-ஆம் தேதி முதல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடம், ஈரோடு மற்றும் கோபி கூட்டுறவு விற்பனை சங்கம் என 4 இடங்களிலும் மஞ்சள் ஏலம் நிறுத்தப்பட்டது.

வேளாண் பொருட்களை, ஒழுங்கு முறை விற்பனை கூடம் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை செய்யலாம் என அரசு அறிவித்தும், கொரோனா பரவலால் மஞ்சள் ஏலம் நடத்துவதை தவிர்த்தனர். இந்தநிலையில் ஈரோடு மாவட்டத்தில் நாளை (புதன்கிழமை) முதல் மஞ்சள் ஏலத்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி கூறியதாவது:

கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் வருகிற 28-ஆம் தேதி வரை அரசு ஊரடங்கை நீட்டித்துள்ளது. ஈரோடு மாவட்டத்துக்கு தளர்வு ஏதும் வழங்கவில்லை. அதேநேரம், புதிய மஞ்சள் அறுவடை செய்யும் விவசாயிகள், அவற்றை குடோனில் பாதுகாத்து வைத்து வருகின்றனர். மேலும் புதிய மஞ்சள் விதைப்பு பணியும் பல்வேறு பகுதியில் தொடங்கி உள்ளது.

மஞ்சள் சாகுபடியை தொடங்க விவசாயிகள் சிரமப்படுகின்றனர். விவசாயத்துக்கான செலவினங்களை மேற்கொள்ள, மஞ்சள் ஏலத்தை தொடங்கினால் உதவியாக இருக்கும் என எண்ணுகின்றனர். அதற்கேற்ப மராட்டியம், தெலுங்கானா போன்ற மாநிலங்களில் மஞ்சள் ஏலம் தொடங்கி நடந்து வருகிறது. எனவே ஈரோடு மாவட்டத்தில் உள்ள 4 இடங்களிலும் நடைபெறும் ஏலத்தில் மஞ்சள் வியாபாரிகள் பங்கேற்பதென முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் சத்தியமூர்த்தி கூறியதாவது: தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகின்றது. இந்திய அளவில் தெலங்கானா, மகாராஷ்டிரா மாநிலங்களில் மஞ்சள் வர்த்தகம் நடந்து வருகிறது.

தமிழகத்தில் வேளாண் விளை பொருள் ஏலங்களுக்கு தடையில்லை என்றாலும் சுகாதார பாதுகாப்பு கருதி வணிகர்கள் இது வரை ஏலங்களில் கலந்து கொள்ளவில்லை. மஞ்சள் மார்க்கெட்விடுமுறை கார ணமாக மஞ்சள் மூட்டைகள் கிடங்குகளில் தேங்கி கிடக்கின்றது விவசாயிகள் சாகுபடி செலவினங்களை மேற்கொள்ள சிரமங்கள் ஏற்படுவதால் விரைவில் மார்க்கெட் திறக்க வேண் டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

எனவே சுகாதார பாதுகாப்பு கருதி முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்தல், தனிநபர் இடை வெளி ஆகியவற்றுடன் ஏல மையங்களில் குறைந்த அளவு நபர்களை அனுமதிப்பதன் மூலம் தொற்று பரவலை தடுக்க முடியும். எனவே வருகின்ற 23-ஆம் தேதி(புதன்கிழமை) முதல் மஞ்சள் ஏலத்தில் கலந்து கொள்வதென முடிவு செய்துள்தாக அவர் கூறினார்.

Top