06/Jan/2021 12:33:10
ஈரோடு, ஜன: ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் தொடங்கி இரவு வரை பல்வேறு பகுதியில் மிதமான மழை முதல் கனமழை பெய்துள்ளது.
குறிப்பாக கோபி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி, அந்தியூர், பெருந்துறை, பவானி சாகர், கொடிவேரி, பவானி, சத்தியமங்கலம் போன்ற பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. ஈரோடு மாநகர் பகுதியில் மாலை முதல் இரவு வரை சாரல் மழை பெய்தது.
ஈரோடு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு: கோபி - 26.2.கவுந்தப்பாடி - 23.நம்பியூர்- 12.பெருந்துறை- 11.பவானிசாகர் - 11.கொடிவேரி - 8.2.பவானி -6.2. ஈரோடு- 5.சத்யமங்கலம் - 5.