logo
ஆலங்குடியில் தமிழ்மாநில அரசுப்பணியாளர் சங்கத்தின் ஸ்தாபக தினவிழா: தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்.

ஆலங்குடியில் தமிழ்மாநில அரசுப்பணியாளர் சங்கத்தின் ஸ்தாபக தினவிழா: தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்.

30/Dec/2020 08:08:36

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பேரூராட்சியில் தமிழ்மாநில அரசுப்பணியாளர் சங்கத்தின் ஸ்தாபக தினவிழாவையொட்டி தூய்மை பணியாளர்களுக்கு புதன்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

  ஆலங்குடி பேரூராட்சியில் நடைபெற்ற விழாவிற்கு சங்கத்தின் மாநிலத் தலைவரும், பேரூராட்சி செயல் அலுவலருமான மு.செ.கணேசன் தலைமை வகித்து, சங்கத்தின் 2021-ம் ஆண்டுக்கான நாட்காட்டியை வெளியிட்டு பேசினார். மாநில துணைத் தலைவர் கனகமுத்து முன்னிலை வகித்தார். தொடர்ந்து, பேரூராட்சி பணியாளர்கள், தூய்மை பணியாளர்களுக்கு கிருமிநாசினிகள், சோப்புகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்வில்,தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர் சங்க மாவட்டச்செயலர் குமார், இணைச்செயலர் ராஜேந்திரன், இளநிலை உதவியாளர்கள் சண்முகவள்ளி, ரேவதி, வரித்தண்டலர் ஜெகநாதன், விழி தொண்டு நிறுவன நிர்வாகி மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர் வெள்ளையன், மகேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Top