logo
காங்கிரஸ் கட்சியின் 136 -ஆவது ஆண்டு தொடக்க விழா: ஈரோட்டில் காங்கிரஸார் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

காங்கிரஸ் கட்சியின் 136 -ஆவது ஆண்டு தொடக்க விழா: ஈரோட்டில் காங்கிரஸார் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

28/Dec/2020 05:23:40

ஈரோடு, டிச: காங்கிரஸ் கட்சியின் 136-ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு இன்று ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி தலைமையில் நிர்வாகிகள் கருங்கல்பாளையத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் காந்தி சிலை முன்பு காங்கிரஸ் கட்சியின் 136 -ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது. மண்டல தலைவர்கள் ஜாபர் சாதிக், விஜயபாஸ்கர், முகமது யூசப், பச்சையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் சுரேஷ், விவசாய பிரிவு தலைவர் பெரியசாமி, மாவட்ட துணை தலைவர் ராஜேஷ் ராஜப்பா, மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைமை புவனேஸ்வரி, மாநில பொதுக்குழு உறுப்பினர் மாரியப்பன், மாவட்ட பொதுச் செயலாளர் கனகராஜ் ,வின்சென்ட், கண்ணப்பன், முகமது அர்சத், சச்சிதானந்தம்.

மாநில எஸ்.சி. பிரிவு துணைத் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் சிவா, சேவா தள தலைவர் ஆறுமுகம், வார்டு தலைவர் இப்ராஹிம், சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் பாட்சா, மாவட்ட எஸ்சி பிரிவு தலைவர் சின்னசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.


இதேபோல், ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் 136 -ஆவது ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ஜி. ராஜன் தலைமையில் ஈரோடு மாவட்டம் அரச்சலூர், கண்டி காட்டு வலசு கிராமத்தில் வட்டாரத் தலைவர் முத்துக்குமார் முன்னிலையில் நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் இந்திய தேசிய காங்கிரஸ் கொடியினை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினருமான ஆர் எம் பழனிச்சாமி ஏற்றி வைத்தார். தொடர்ந்து மூத்த காங்கிரஸ் நிர்வாகி கந்தசாமி பொதுமக்களுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் இனிப்பு வழங்கினார்.

 இதில், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம், வட்டார தலைவர் கொடுமுடி கோபாலகிருஷ்ணன், இளைஞர் காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளர் விஜய், ஈரோடு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் தளபதி ரமேஷ்.

மாவட்ட பொருளாளர் ரவி, வட்டார துணை தலைவர் சிவக்குமார், நிர்வாகிகள் சீதாபதி, கவுதமன், குமார், ஜெயபிரகாஷ் முத்து உள்ளிட்ட பேரியக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து, தொடர்ந்து காங்கிரஸ் கட்சி கொடியை கையில் ஏந்தி மக்கள் ராஜன் தலைமையில் நிர்வாகிகள் ஊர்வலமாக சென்றனர்.

Top