logo
 சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் கடனுதவி: கூடுதலாக 1,500 பேர் சேர்க்கப்படுவர்- ஈரோடு மாநகராட்சி ஆணையர் தகவல்

சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் கடனுதவி: கூடுதலாக 1,500 பேர் சேர்க்கப்படுவர்- ஈரோடு மாநகராட்சி ஆணையர் தகவல்

26/Dec/2020 09:37:04

ஈரோடு, டிச: ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு மத்திய அரசின் நிதி உதவி திட்டத்தின் கீழ் ரூ.10 ஆயிரம் கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே மாநகர் பகுதியில் உள்ள 764 வியாபாரிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஏராளமான சாலையோர வியாபாரிகள் பயன் அடைந்து வருவதால் இந்த திட்டத்தில் மேலும் 1500 பேரை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே,  இந்தத் திட்டம் மூலம் கடன் பெற விரும்பும் வியாபாரிகள் தங்களது ஆதார் அட்டை, ஸ்மார்ட் கார்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வங்கியின் கணக்கு புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களுடன் மாநகராட்சி சமுதாய அமைப்பாளர்களை தொடர்பு கொள்ளலாம்.

 மேலும் கடன் உதவி பெற வரும் வியாபாரிகள் மறக்காமல் தங்களது செல்போன் எண்ணை கொண்டு வர வேண்டும்.   செல்போனில் ஓ.டி.பி  வரும் அதை வைத்து தான் பதிவு செய்ய முடியும். வரும் ஜனவரி 3 -ஆம் தேதி வரை மாநகராட்சி அலுவலகத்தில் இந்த திட்டத்தில் கடனுதவி பெற விரும்பும் வியாபாரிகள் தங்களை பதிவு செய்து கொள்ளலாம் என்று ஈரோடு மாநகராட்சி ஆணையர் மா. இளங்கோவன் தகவல்  தெரிவித்துள்ளார். 

                                                   


Top