logo
 ரத்து செய்யப்பட்ட பட்டாக்களை திரும்ப   வழங்கக்கோரி கோபிச்செட்டிபாளையம் அருகே  பொதுமக்கள்   சாலைமறியல்

ரத்து செய்யப்பட்ட பட்டாக்களை திரும்ப வழங்கக்கோரி கோபிச்செட்டிபாளையம் அருகே பொதுமக்கள் சாலைமறியல்

20/Dec/2020 08:09:56

 ஈரோடு டிச: கோபிசெட்டிபாளையம் அருகேஉள்ள எல்லமடை கிராமத்தில் வீடற்றவர்களுக்கு 1992-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட  இலவச வீட்டுமனை பட்டாக்களை தற்போது  வேறு நபர்களுக்கு பட்டா வழங்கியுள்ளதாகக் கூறியும் 1992 -ஆம் ஆண்டில் பட்டா பெற்றவர்களுக்கே  மீண்டும் பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி பொலக்காளிபாளையம் அத்தாணி சாலையில் எல்லமடையில் 200-க்கும் மேற்பட்டவர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடுமாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நஞ்சை கோபி ஊராட்சிக்குட்பட்ட எல்லமடைகிராமத்தில் கடந்த 1992 முதல் 1995 வரை 204 குடும்பங்களுக்கு அப்போது போக்குவரத்துஅமைச்சராக இருந்தசெங்கோட்டையன் இலவச வீட்டுமனை வழங்கினார். அதில் சிலருக்குஅரசுசார்பில் வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது. இதில் 97 பயானாளிகளுக்கு வீடுகட்டித் தராத நிலையில் அவர்கள் வெளியூர்களுக்குசென்று கூலிவேலை செய்து வந்தனர். 

இந்நிலையில் தற்போதுஅரசுசார்பில் பசுமைவீடுகட்டுவதற்காக 97 குடும்பத்தினரும் விண்ணப்பித்தபோதுஅவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டு வேறுநபர்களுக்கு வழங்கபட்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் அரசு வழங்கிய பட்டாவுடன் வெள்ளிக்கிழமை  திரண்டு வந்து கோட்டாட்சியரிடம் மனுஅளித்தனர்.அதனைதொடர்ந்துவட்டாட்சியர் அலுவலகத்தையும் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 இதையடுத்து, வருவாய்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டு எல்லமடை கிராமத்தில் வீடற்றவர்களை கணக்கெடுக்கும் பணிதொடங்கப்பட்டது. இந்நிலையில் வீட்டுமனை பட்டா வழங்கியபோது ஒரு சிலருக்கு மட்டும் அரசுவீடு கட்டிகொடுத்தது.

மற்றவர்களுக்கு இதுவரை வீடுகட்டநடவடிக்கை எடுக்கவில்லை எனவும், ஏற்கெனவே வீட்டுமனை பட்டா கொடுக்கப் பட்டவர்களுக்கே இலவச பட்டாக்களை திரும்ப  வழங்க  வேண்டும் என்று கூறி அப்பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டபொதுமக்கள் எல்லமடை பேருந்துநிறுத்தம் அருகில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொலவக்காளிபாளையம் - அத்தாணிசாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

தகலறிந்துசம்பவ இடத்திற்கு வந்தகோபிசெட்டிபாளையம் வட்டாட்சியர் தியாகராஜு, காவல்ஆய்வாளர் சோமசுந்தரம் மற்றும் காவல்துறையினர் வருவாய்துறையினர் மறியலில் ஈடுபட்டிருந்தபொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ரத்து செய்யப்பட்ட பட்டாதார்க ளுக்கே மீண்டும் பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் செங்கோட்டையனும் அதையே வலியுறுத்தியுள்ளதாகவும் கூறினர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் போராட்டத்தை கை விட்டு கலைந்து சென்றனர். இதனால் எல்லமடைபகுதியில் சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக பரபரப்பான சூழல் நிலவியது.


Top