logo
ரோட்டரியின் 9  சங்கங்கள் இணைந்து நடத்திய தொழிற் சேவை விருது வழங்கும் விழா

ரோட்டரியின் 9 சங்கங்கள் இணைந்து நடத்திய தொழிற் சேவை விருது வழங்கும் விழா

18/Dec/2020 05:46:54

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கி வரும் 9 ரோட்டரி சங்கங்கள் இணைந்து ரோட்டரியில் வாய்ப்புகள் என்ற தலைப்பில் ரோட்டரி நிதியம் வழங்குவதின் அவசியம் மற்றும் தொழிற் சேவை விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது 

 புதுக்கோட்டை விக்டோரியா ஹாலில்  நடந்த நிகழ்வுக்கு மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் ஜெ.ராஜேந்திரன் தலைமை வகித்தார்.

 கந்தர்வக்கோட்டை ரோட்டரி சங்க தலைவர் எஸ்.கே. சிவா ரோட்டரி பிரார்த்தனையை வாசித்தார்.  மண்டல ஒருங்கிணைப்பாளர் வி.கர்ணன், துணை ஆளுநர்கள் எம்ஏ. முருகப்பன், ஏ.கிருஷ்ணமூர்த்தி, புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க பட்டய தலைவர் க.நைனா முகமது, கரம்பக்குடி ரோட்டரி சங்க தலைவர் ஏ.செந்தில்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நிகழ்ச்சியில், கொரோனா காலத்தில் சிறப்பாக பணி செய்தமையை பாராட்டி புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி கண்காணிப்பாளரும், எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக் கழக செனட் உறுப்பினருமான மருத்துவர் ஜி.ஏ. ராஜ்மோகனுக்கு  தொழில் சேவை விருதினை ரோட்டரி மாவட்டம் 3000-த்தின் தொழில் சேவை விருதின் மாவட்ட சேர்மன் பி.எல். அழகப்பன்  வழங்கினார். விருதினைப் பெற்றுக் கொண்ட மருத்துவர் ஜி.ஏ. ராஜ்மோகன் ஏற்புரையாற்றினார்.

சர்வதேச ரோட்டரி அறக்கட்டளையின் மண்டல துணை ஒருங்கிணைப்பாளராக மேனாள் மாவட்ட ஆளுநர் பி.கோபாலகிருஷ்ணன் தேர்வானதையும், அவரது  சேவைகளைப்பாராட்டியும் ரோட்டரி மாவட்ட ஆளுநர் அ.லெ.சொக்கலிங்கம் சால்வை அணிவித்து கௌரவித்தார்.

நிகழ்ச்சியில் ரோட்டரி அறக்கட்டளை பகுதி 5-இன் மண்டல துணை ஒருங்கிணைப்பாளர் பி. கோபாலகிருஷ்ணன்  ரோட்டரி வாய்ப்புகள் என்ற தலைப்பில்  சிறப்புரையாற்றினார். ரோட்டரி மாவட்டம் 3000-த்தின் ஆளுநர் அ.லெ.சொக்கலிங்கம்  ரோட்டரி நிதியம் மற்றும் சங்க செயல்பாடுகள் குறித்து விளக்கவுரையாற்றினார். 

மதுரை நார்த் வெஸ்ட் ரோட்டரி சங்க தலைவர் ஞானதேசிகன் ரோட்டரி கொடி வழங்கினார். மேனாள் மாவட்ட ஆளுநர் சைபால் சண்முகசுந்தரம், புதுக்கோட்டை ரோட்டரி சங்க தலைவர் ஆர்.ஜெயக்குமார், மகாராணி ரோட்டரி சங்க தலைவர் சினேகா, புதுக்கோட்டை கிரவுன் சிட்டி ரோட்டரி சங்க தலைவர் கோபிநாதசிவம், மேனாள் மாவட்டச் செயலாளர் சுப்பையா, பெரம்பலூர் ஜெ.கார்த்திக், மணிகண்ட ஆனந்த், அசோக் பெரியசாமி, வழக்குரைஞர் பாபு, சோ.பார்த்திபன், பரமசிவம், செல்லத்துரை, தங்கமணி, ஆரோக்கியசாமி.

 மதுரை ரோட்டரி சங்க உறுப்பினர்கள், புதுக்கோட்டை வருவாய் மாவட்ட ரோட்டரி சங்க உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க தலைவர் மருத்துவர் க.ஆறுமுகம் வரவேற்றார். கரம்பக்குடி ரோட்டரி சங்க மேனாள் தலைவர்  பி.ஜோதிமணி விழா நிகழ்வுகளை தொகுத்தளித்தார். ஏற்பாடுகளை புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க ஆலோசகர் மாருதி கண. மோகன்ராஜ்  செய்திருந்தார். சுப்பிரமணியபுரம் ஜேம்ஸ் ரோட்டரி சங்க தலைவர் பி.சோமு நன்றி கூறினார்.

Top