logo
சட்டப்பேரவை தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கீழபவானி பாசன விவசாயிகள் அறிவிப்பு

சட்டப்பேரவை தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கீழபவானி பாசன விவசாயிகள் அறிவிப்பு

18/Dec/2020 10:05:15

 ஈரோடு- டிச: கீழ்பவானி பிரதான வாய்க்காலில் அமைக்கப்படும் கான்கிரீட் திட்டத்தை அரசு கைவிடாவிட்டால்  10 தொகுதிகளில்    சட்டப் பேரவைத் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக  கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. 

ஈரோடுமாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கடுக்காம்பாளைத்தில் நடைபெற்ற  கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 பவானிசாகர் அணையிலிருந்து செல்லும் கீழ்பவானி பிரதான பாசனவாய்க்கால் மூலம் ஈரோடு திருப்பூர் மற்றும் கரூர் ஆகிய மூன்றுமாவட்டங்களில் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் நேரடிபாசனமும் 1 லட்சம் ஏக்கருக்கும் மேல் முறைமுகபாசனமும் பெற்றுவலுவதுடுன் இந்த மூன்றுமாவட்டங்களுக்கும் பொதுமக்களின் குடிநீர் ஆதாராமாகவும் திகழ்கிறது. 

இந்நிலையில், தமிழகஅரசுகீழ்பவானிபாசனவாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கரூ.178 கோடி நிதி ஒதுக்கீடுசெய்து பணிகளுக்கு ஆணையை பிறப்பித்துள்ளது. அதனால் ஈரோடுதிருப்பூர் மற்றும் கரூர் மாவட்டவிவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கீழ்பவானிவாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைத்தால் கசிவுநீர் மூலம் பாசம் பெறும் ஒருலட்சத்திற்கும் மேற்பட்டஏக்கர் விளைநிலங்கள் பாலைவனம் ஆகும் சூழ்நிலைஉள்ளதாகவும்தென்னைவாழைமஞ்சள் கரும்பு உள்ளிட்ட நீண்ட காலபயிர்கள் பாதிக்கப்படும். நிலத்தடிநீர் மட்டம் குறைந்து குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே,  கீழ்பவானி பாசனவாய்க்காலில்  கான்கிரீட் தளம் அமைக்கப்படும் திட்டத்தைஅரசுகைவிடவேண்டும்.இல்லாவிடில் தமிழகஅரசுக்கு அளித்துவரும் ஆதரவை திரும்பெறப் பெறுவது. தொடர் போராட்டங்களில் ஈடுபடுவதுடன் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கீழ்பவானிபாசனபகுதிகளைச் சேர்ந்த  10 தொகுதிகளிலும் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தேர்தலைப் புறக்கணிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் நாகவேதம்பாளையம், கடுக்காம்பாளையம், அய்யம்புதூர், பழையூர், கோரக்காட்டூர், வெள்ளாங்கோயில், கொரவம்பாளையம் உள்பட 50- க்கும் மேற்பட்டகிராம விவசாயிகள் பொதுமக்கள் மற்றும் மாவட்டவிவசாய சங்கபிரதிநிதிகள் உள்பட 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். 

                                                   

        


Top