logo
அறிவோம் மார்கழி மாதத்தின் புனிதத்தை...

அறிவோம் மார்கழி மாதத்தின் புனிதத்தை...

13/Dec/2020 06:46:44

புதுக்கோட்டை:  மார்கழி மாதத்தின் புனிதத்தை பெருமைகள் பற்றி அறிந்து கொள்வோம் என்கிறார் புதுக்கோட்டை நீதி சாஸ்திர வல்லுனர் ஜோதிடர் சிவ ஸ்ரீ பாலஸ்ரீ ஈசாண சிவாச்சாரியார்.

மார்கழி மாதத்தின் பெருமைகள் பற்றி  அவர் மேலும் கூறியதாவது:   அவன் அருளாலே அவன்தாழ் வணங்கிட  என்ற தத்துவத்தின் பொருளைக் கண்டு   மனிதன், மற்றொரு மனிதன்மீது  அன்பு காட்டும் போது  இறைவன்  வசம் ஆகிறான்.  பின்பு மனிதன்  தன்  பிறந்த பிறவியின் தத்துவத்தை அறிந்தும் இறைவன்  வசம் ஆகிறான். இது போல் மாதங்களில் மார்கழி மாதமும் தெய்வங்களுக்கு வசமானதால் உயர்ந்த மாதமாகிறது.

 தேவர்களுக்கு  விடியும் காலை பொழுது ஆகிறது.  சிவபெருமானுக்கு   ஆருத்திரா தரிசனமும்   பெருமாளுக்கு வைகுண்ட ஏகாதசியும் பேறு பெற்ற  மாதம்  என்பதை நமக்கு உணர்த்தி மிக சக்தி வாய்ந்த  மார்கழி மாதமாக  திகழ்கிறது. இந்துக்களாகிய நாம் அனைவரும் சக்தி வாய்ந்த மார்கழி மாதத்தில் அதிகாலை  எழுந்து வீட்டில் தீபம் ஏற்றுவதால் கஷ்டங்கள்  நீங்கி  மகிழ்ச்சியான குடும்பமாக மாறும். 

கல்விப்பயலும் மாணவ மாணவிகள் அதிகாலை படிக்கும் போது ஞாபகசக்தி அதிகரிக்கும்    மேலும்  உயர்ந்த எண்ணங்கள் சிறு  வயதில் வருவது மிக   உயர்ந்த விஷயம். எனவே பெற்றோர்கள் தனது குழந்தை செல்வங்களை அதிகாலையில் படிக்க வைக்கவேண்டும் திருமணம் ஆக  வேண்டிய பெண்கள் தங்களது தாய் , தந்தையர் காலில் விழுந்து வணங்கி கோவிலுக்கு சென்று தீபம் ஏற்றி வழிபட்டால் உயர்ந்தவாழ்க்கை அமையும் நல்ல சந்ததி அமையும் என்பது மிக முக்கிய மானதாகும்.

தம்பதியர்கள் கோவிலுக்கு சென்று அன்னதானம் செய்தும் , தெய்வங்களை வழிபட வருபவர்களை வணங்கி வரவேற்று உபசரித்து மகிழும்போது  முன்னோர்கள் சாபம்  நீங்கும் .வம்சம் உயர்ந்து வாழும்  என்பது இறைவனின் பேரருளாகும் மார்கழி மாதத்தில் வேலையில்லாத பட்டதாரிகள் கோமாதாவிற்கு உணவுகள் பழங்கள்  கொடுத்து வணங்கும்போது துயர்நீங்கி பெயர் புகழும்கிடைக்கும் . 

நல்ல வேலை, வாழ்க்கைதுணைஅமையும். இதுபோல் வயதானவர்கள் தங்களது இருப்பிடத்திலிருந்தே தெய்வ நாமங்களை சொல்லி    இயற்கையான  காற்றை சுவாசிக்க வேண்டும் அதிகாலை தூங்காமல்கண்விழித்திருந்தால் வாழ்க்கையின் தத்துவம் புரிந்து மனஅமைதிஅடையாலாம் எனவே வருடம் ஒருமுறை 30நாட்கள் நமக்கு இறைவன் கொடுத்த ஒரு வரப்பிரசாதம் .

அதிகாலை எழுந்து கோலம் இட்டு அதில் சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து கோலத்தை பூக்களால் அலங்கரித்து மார்கழியை வரவேற்கிறோம். பீடு என்றால் பெருமை என்று பொருள். பெருமை நிறைந்த மாதம் என்பதே மருவி பீடை என்றானது.

அதுவரை இருந்த எல்லா கஷ்டங்களும் நீங்கி வரும் தைத் திங்களில் இருந்து புது வாழ்க்கை அமைய வேண்டும் என பிரார்த்திக்கப்படும் மாதமும் இது தான்  மார்கழி முப்பது நாட்களும்  பாவை விரதம் இருந்து தானே ஆண்டாள் அந்த பெருமாளையே மணாளனாகக் கொண்டாள். இதிலிருந்தே அந்த மாதத்தின் பெருமையை உணரலாம்..விடியற்காலையில் இருந்தே, ஆலயங்களில் வழிபாடுகள் தொடங்கிவிடும். 

அதுபோலவே பல ஆலயங்களில் திருப்பள்ளி எழுச்சி பூஜை தொடங்கி விடும்.மார்கழி மாதத்தில் கோலத்தில் பூ வைப்பதற்கும், சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைப்பதற்கும் முன்னோர்கள் காரணங்கள் சொல்லிச் சென்றுள்ளனர்.அக்காலத்தில், திருமணத் தரகர்களோ, மாப்பிள்ளை - பெண் தேவை என்பதற்காக வெளியிடப்படும் கல் யாண விளம்பரங்களோ கிடையாது. 

எந்த வீட்டில் பெண் அல்லது பிள்ளை திருமணத்துக்குத் தயாராக இருக்கிறார்களோ, அந்த வீட்டின் வாயிலில் மட்டும் கோலத்தின் மேல் பூசணிப் பூ வைப்பார்கள். ஒட்டு மொத்தமாக எல்லா வீடுகளிலும் வைக்க மாட்டார்கள்.மார்கழி மாத அதிகாலையில் வீதி பஜனையில் வருபவர்களின் பார்வையில் இந்தப் பூக்கள் தென்படும். விவரத்தைப் புரிந்து கொள்வார்கள். தை மாதம் பிறந்த உடனே கல்யாணத்தை பேசி, முடிப்பார்கள்.

 இதன் காரணமாகவே மார்கழி மாதத்தில் வீட்டு வாயிலில் இருக்கும் கோலத்தில் பூக்களை வைத்தார்கள்.அதுபோலவே மார்கழி மாதத்தில் பல புராதன நிகழ்வுகளும் நடந்துள்ளன. மகாபாரத யுத்தம் மார்கழி மாதத்தில் நடைபெற்றதாக இதிகாசம் கூறுகிறது.  ஆன்மிக மெய்யன்பர்கள் மார்கழி மாத புனிதத்தை தங்கள் வாழ்வில் எல்லா நலமும்,வளமும் பெற்று   பெருவாழ்வு வாழ இறைவனை வேண்டி பிராத்திக்கிறேன் என்றார் நீதி சாஸ்திர  வல்லுனர் ஜோதிடர்  சிவ ஸ்ரீ பாலஸ்ரீ ஈசாண  சிவாச்சாரியார்(9787827049), புதுக்கோட்டை.

Top