logo
பொது வேலை நிறுத்தம்: ஈரோட்டில்இயல்பு வாழ்க்கை பாதிப்பில்லை :மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு

பொது வேலை நிறுத்தம்: ஈரோட்டில்இயல்பு வாழ்க்கை பாதிப்பில்லை :மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு

08/Dec/2020 04:58:59

ஈரோடு-டிச: மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் பல்வேறு பகுதிகளில் சென்ற லட்சக்கணக்கான விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

 அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் தமிழகத்திலும் தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்நிலையில், மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் இன்று பொது வேலை நிறுத்தத்திற்கு (பாரத் பந்த்)- க்கு அகில இந்திய விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளது. இந்தப் பொது வேலை நிறுத்தத்திற்கு எதிர்க் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

தமிழகத்தில் தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பொது வேலை நிறுத்தம் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

 ஈரோடு மாவட்டத்தில் ஏ.ஐ.டி.யூ.சி, சி .ஐ.டி.யு, ஐ.என்.டி.யூ.சி உட்பட 10 -க்கும் மேற்பட்ட மத்திய தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதைப் போன்று சில விவசாய சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தன.

 பொது வேலை நிறுஇன்று ஈரோடு மாவட்டத்தில் பொது வேலைநிறுத்தம் தொடங்கியது. மாவட்டத்தில் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கின. மாநகர் பகுதியில் சில டீ கடைகள் வழக்கம் போல் இயங்கின. ஈரோடு வ.உ.சி பூங்கா பகுதியில் செயல்பட்டு வரும் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் இன்று இயங்கவில்லை. பொது வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நேதாஜி தினசரி மார்க்கெட் இன்று ஒருநாள் அடைக்கப்பட்டிருந்தது.

 இங்கு, 800-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள். 160-க்கும் மேற்பட்ட பழ கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் எப்போதும் பரபரப்பாக காட்சி அளிக்கும் மார்க்கெட் பகுதியில் இன்று மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. மாநகர் பகுதியில் பெரும்பாலான கடைகள் று திறக்கப்பட்டிருந்தன. அதே நேரம்  வழக்கம் போல் கனி மார்க்கெட் (ஜவுளி சந்தை) இயங்கியது. ஆனால் வெளிமாநில வியாபாரிகள் குறைந்த அளவே வந்திருந்தனர். மேலும், பொதுமக்கள் கூட்டமின்றி  ஜவுளி சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. 


எப்போதும் பரபரப்பாக காட்சியளிக்கும் பன்னீர்செல்வம் பார்க், ஈஸ்வரன் கோவில் வீதி ,கொங்காலம்மன் வீதி,ஆர் கே வி ஈரோடு போன்ற பகுதி மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் போலீசார்  தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். குறிப்பாக பேருந்து  நிலையம், ரயில் நிலையம், மத்திய அரசு அலுவலகங்கள் போன்ற மக்கள் கூடுமிடங்கலில்  போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை கூறியதாவது:அரசு அலுவலகங்கள், வங்கிகள் வழக்கம் போல் செயல்பட்டன. பொது போக்குவரத்து தடையின்றி தொடந்தது. பொது வேலைநிறுத்தத்தை ஒட்டி ஈரோடு மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு அலுவலகங்கள் ரயில் நிலையம், தபால் நிலையம், பிஎஸ்என்எல் அலுவலகம், அரசு போக்குவரத்து பணிமனைகள்,  பேருந்து  நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்..கடையடைப்பில் ஈடுபடாமல் உள்ள வணிக நிறுவனங்களை மூடச் சொல்லி கட்டாயப் படுத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் .இதைப்போல் 

Top