logo
ஆலங்குடி அரிசி ஆலைகளிலிருந்து வெளியேறும்  சாம்பல் தூசியால் மக்கள் அவதி

ஆலங்குடி அரிசி ஆலைகளிலிருந்து வெளியேறும் சாம்பல் தூசியால் மக்கள் அவதி

05/Dec/2020 07:46:55

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் அரிசி ஆலைகளில் இருந்து வரும் தூசி மற்றும் சாம்பலால் குடிநீர்,  உணவுப் பொருள்கள் அனைத்தும் வீணாகிப் போவதால் அவற்றைபயன்படுத்த  முடியாமல் போவதால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் சுமார் 20  அரிசி ஆலைகள்  இயங்கி வருகின்றன. இந்நிலையில்,  கலிபுல்லாநகர் பகுதியில் இயங்கும்  அரிசி ஆலைகளில் இருந்து வெளியேறும் சாம்பல் மற்றும் தூசிகள் அப்பகுதியில் உள்ள வீடுகளில் அதிக அளவில் தேங்கி விடுகின்றன . இதனால் குடிநீர் மற்றும் உணவுப் பொருட்கள் வீணாகின்றன. 

மேலும் அப்பகுதி  குழந்தைகளின் கண்களில் அடிக்கடி தூசி விழுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து பலமுறை அரிசி ஆலை அதிபர்களிடம் எடுத்துக்கூறியும் தூசி பரவுவதை தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் அப்பகுதி மக்கள் அரிசி ஆலைகளை முற்றுகையிட முயற்சி செய்தனர் . தகவலறிந்த ஆலங்குடி போலீசார் இதுகுறித்து தாசில்தாருக்கு தகவல் கொடுத்து 10 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Top