logo
ஆலங்குடியில் சாலைப்பள்ளத்தில் நாற்று நட்டு போராட்டம்.

ஆலங்குடியில் சாலைப்பள்ளத்தில் நாற்று நட்டு போராட்டம்.

05/Dec/2020 07:04:44

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி சாலைப்பள்ளங்களில் நாற்று நடவு செய்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  ஆலங்குடி பேரூராட்சிக்கு உள்பட்ட எழில் நகர் செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியது. இதனால், அப்பகுதி மக்கள் போக்குவரத்திற்காக மிகவும் அவதியடைந்து வந்துள்ளனர். சாலையை சீரமைக்கக்கோரி அப்பகுதி மக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால், அப்பகுதி மக்கள் சாலையை உடனே சீரமைக்க வேண்டுமென வலியுறுத்தி சாலையில் உள்ள பள்ளங்களில் நாற்று நடவு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Top