logo
ஈரோடு மாவட்டத்தில் 80 இடங்களில் மினி கிளினிக் திறக்க பரிந்துரை: சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் 80 இடங்களில் மினி கிளினிக் திறக்க பரிந்துரை: சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் தகவல்

03/Dec/2020 09:51:05

ஈரோடு: தமிழகத்தில் கொரோனாவுக்கான ஊரடங்கு தளர்வு குறித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டபோது தமிழகத்தில் டிசம்பர் 15-ஆம் தேதிக்குள் 2,000  இடங்களில் மினி கிளினிக் திறக்கப்படும் என அறிவித்திருந்தார். மேலும்,  மாவட்ட வாரியாக தேவையான இடங்களில் இந்த கிளினிக் இயங்கிகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் இங்கு ஒரு டாக்டர் ஒரு நர்ஸ் ஒரு உதவியாளர் செயல்படுவர் காலை மற்றும் மாலையில் குறித்த நேரம் இங்கு சிகிச்சை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இதையடுத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் மினி கிளினிக் திறக்கும் இடங்களில் குறித்து ஆய்வு செய்யப்பட்டு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஈரோடு மாவட்டத்திலும் அமைப்பதற்கான இடங்கள் குறித்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

 இதுகுறித்து ஈரோடு மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் கூறியதாவது கொரோனா பரவல் தடுப்பு டன் மக்களுக்கு கூடுதல் மருத்துவ சேவை வழங்கும் வகையில் மினி கிளினிக்  இயங்கும். அனைத்து மாவட்டங்களுக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மினி கிளினிக் ஒதுக்கப்படும்.

ஈரோடு மாவட்டத்தில் ஏற்கெனவே நகர்புற சுகாதார மையங்கள் கிராமப்புறங்களில் ஆரம்ப மற்றும் துணை சுகாதார மையங்கள் இயங்குகிறது இவற்றிற்கு மாற்றாக குடிசைப்பகுதியில் நீண்ட தூரத்தில் உள்ள கிராமப் பகுதிகளில் மலைப்பகுதி குடிசை மாற்று வாரிய வீடுகள் பகுதி என மருத்துவ சேவை தேவைப்படும் பகுதிகளை கண்டறிந்து செயல்படும்

இங்கே, காய்ச்சல், சளி, இருமல், ரத்த அழுத்தம், சர்க்கரை உள்ளிட்ட அனைத்து வகையான சிகிச்சையும் வழங்கப்படும். இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் 80 இடங்களை அடையாளம் கண்டு மாவட்ட நிர்வாகம் மூலம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம். அரசு சார்பில் எவ்வளவு இருக்கிறதோ அங்கு சேவையை தொடங்குவோம் இங்கு பணி செய்வோர் விவரங்களை அரசு தெரிவிக்கும் இதன்மூலம் கூடுதலாக விரைவாகவும் மக்களுக்கு மருத்துவ சேவை கிடைக்கும் இவ்வாறு அவர் கூறினார் 


Top