logo
நியாயவிலைக் கடைகளில் சுண்டல் ஒரு சிலருக்கு மட்டும் வழங்குவதை கண்டித்து பெண்கள் வாக்குவாதம்

நியாயவிலைக் கடைகளில் சுண்டல் ஒரு சிலருக்கு மட்டும் வழங்குவதை கண்டித்து பெண்கள் வாக்குவாதம்

03/Dec/2020 09:30:29

ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூர்  புதுக்காடு பகுதியில் உள்ள நியாயவிலைக் கடைகளில் சுண்டல் ஒரு சில குடும்ப அட்டைதாரர்களுக்கு  மட்டும் வழங்குவதை கண்டித்து பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

தமிழ்நாடு முழுவதும் நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் மாதம் ஒரு கிலோ சுண்டல் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்து அதன் அடிப்படையில் தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்கள்  மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இரண்டு பிரிவு உள்ளவர்களுக்கு சுண்டல் மற்ற ஒரு  பிரிவினருக்கு துவரம் பருப்பு வழங்கப்படுகிறது.

 இதில் 1-ஆம் தேதி முதல் 7-ஆம்  தேதி வரை அந்த இரண்டு பிரிவினருக்கும் கடந்த 5 மாதங்களாக சுண்டல் வழங்கப்படாததால் 5 கிலோ சுண்டல் தற்சமயம் வழங்கப்படுகிறது. சுண்டல் வழங்கப்படுவதை கண்டித்து மற்ற குடும்ப அட்டைதாரர்கள் அந்தியூர் புதுக்காடு செல்லும் சாலையில் உள்ள நியாயவிலைக் கடைகளை முற்றுகையிட்டு ஆவேசத்துடன் எங்களுக்கும் சுண்டல் வழங்க வேண்டும் நாங்களும் வறுமைக்கோட்டிற்கு கீழ் தான் உள்ளோம் ஆகவே அரசு இதை கவனத்தில் கொண்டு எங்கள் குடும்ப அட்டைகளுக்கும் சுண்டக்கடலை வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 


Top