logo
அரசு வேலைக்கு போலி நியமன ஆணை வழங்கி மோசடி செய்தவரை  கைது செய்யக்கோரி எஸ்.பி.யிடம் மனு

அரசு வேலைக்கு போலி நியமன ஆணை வழங்கி மோசடி செய்தவரை கைது செய்யக்கோரி எஸ்.பி.யிடம் மனு

03/Dec/2020 02:26:23

ஈரோடு : அரசு வேலை வாங்கித் தருவதாக  போலி ஆணை வழங்கி் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை கோரி ஈரோடு  மாவட்ட எஸ்.பி.யிடம் இளைஞர்கள் புகார் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், மருங்குளம், திலகர் தெருவை சேர்ந்தவர் திருமூர்த்தி. இவரது மகன் ராஜு (29). இவர் இன்று ஈரோடு எஸ்.பி.அலுவலகத்திற்கு வந்து அளித்த புகார் மனு விவரம்:

நான் எம்.சி.ஏ முதுகலை பட்டம் முதுகலைப் பட்டம்  படித்து  முடித்து அரசு வேலை தேடிக் கொண்டிருந்தேன். இந்த நிலையில் தஞ்சாவூர் ஆரோக்கிய நகரைச் சேர்ந்த ஒரு நபர் அறிமுகமானார். அவர் மூலமாக ஈரோடு பூந்துறை ரோட்டை சேர்ந்தவர் வருவாய் துறையில் இளநிலை உதவியாளர் பணிக்கு தன்னை சேர்த்து விடுவதாகவும் அதற்கு ரூ.3 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும் கூறினார். அவரை நம்பி முதற்கட்டமாக ரூ.50 ஆயிரம்  கொடுத்தேன். அப்போது அந்த நபருடன் மேலும் சிலர்  இருந்தனர்.  15  நாட்கள் கழித்து பணி நியமன ஆணையை அளிக்க உள்ளதாகவும் அதற்கு மீதி தொகையை தர வேண்டும் என்று அவர் என்னிடம் செல்போன்  மூலமாக தெரிவித்தார். 


அதன் பிறகு என்னிடம் இருந்த 30 ஆயிரத்தைகொடுத்து அவர்களிடமிருந்து பணி நியமன ஆணையை  பெற்றுக் கொண்டேன். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சான்றிதழ் சரிபார்ப்பதற்காக சென்னைக்கு வர சொன்னார்கள். அங்கு மீதமுள்ள 2 லட்சத்து 20 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு தமிழக அரசின் முத்திரையுடன் கூடிய பணி நியமன உத்தரவை பணி நியமன உத்தரவை பெற்று கொண்டு என்னை அனுப்பி வைத்தார்கள். அதன் பிறகு ஒரு வருடம் ஆகியும் எந்த ஒரு தகவலும் வரவில்லை. இது தொடர்பாக ஆய்வு செய்தபோது இந்த பணி உத்தரவு ஆணை போலியானது என தெரியவந்தது.எனவே என்னை ஏமாற்றிய நபர் மீதும் அவருக்குத் துணையாக இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து எனது பணத்தை திருப்பித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.

இதேபோன்று மேலும் 5 பேர் இன்று எஸ்பி அலுவலகத்தில் வந்து தங்களிடமும் பணத்தைப் பெற்றுக் கொண்டு போலி நியமன ஆணை வழங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். சுமார் ரூ 50 லட்சம் வரை அந்த கும்பல் மோசடி ஈடுபட்டுள்ளது. அவர்கள்  மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்று மனு அளித்தனர்

Top