01/Dec/2020 02:53:44
புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி வெளியிட்ட அறிவிப்பு:தென் கிழக்கு வங்கக்கடலில் புரெவி புயல் உருவாகி குமரி கடல் பகுதி நோக்கி நகரும் நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் ஒட்டிய கடல் பகுதியில் பலத்த சூரைக்காற்று மணிக்கு 60-70 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்திலிருந்து எச்சரிக்கை அறிவிப்பு பெறப்பட்டுள்ளது.
எனவே புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். படகுகளை பாதுக்காப்பான இடத்தில் நிலை நிறுத்தியும், மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது.