logo
தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை செயற்குழு  கூட்டம்

தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை செயற்குழு கூட்டம்

25/Nov/2020 09:12:58

சென்னை: தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை செயற்குழு கூட்டம் மாநிலத் தலைவர் .முத்துக்குமார் தலைமையில் நடை பெற்றது சென்னை காரம்பாக்கம் நாடார் திருமண மண்டபத்தில் 23.11.2020 -அன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில், தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை புதுக்கோட்டை மாவட்ட தலைவர் மாருதி கண. மோகன் ராஜா கலந்து கொண்டு பேசினார் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத்திலிருந்தும் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இதில், மாநிலத்தலைவர் அ.முத்துக்குமார் தனது ஏற்புரையில் பேசியதாவது:தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம், மற்றும் எனது பிறந்தநாள் நிகழ்ச்சியில் மாநிலம் முழுவதும் இருந்து வந்திருந்த நிர்வாகளில் கலந்து  சிறப்பாக நடத்தியதற்கு நன்றி பாராட்டுகிறேன்.

வருகைதந்த நிர்வாகிகள் நமது பேரவையின் வளர்ச்சிக்கு நல்ல ஆலோசனகளை வழங்கினார்கள் குறைந்தகாலஅளவில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கூட்டத்துக்கு அதிகமான அளவில் பங்கேற்ற நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள் இரவுபகல் பாராமல் உழைத்த செயல்வீரர்களுக்கு நன்றிகள். எந்த இயக்கமும் பெற்றிடாத சிறப்பை நமது பேரவை பெற்றுள்ளது.

எனது நாற்பது ஆண்டுகளில் கிடைக்காத,அனுபவங்கள்இந்த நாற்பது மாதங்களில் கிடைத்துள்ளது  திரும்பிய இடங்களில் எல்லாம் வெற்றிமுரசுகொட்டிவரும் நமது சங்கத்தின் செயல்வீரர்களுக்கு மனமார்ந்த வணக்கங்கள். ஒவ்வொருவரின் செயல் திறனையும் தனித்தனியாக விவரிக்க  எனக்கு ஆசைதான்.

  ஆனால் அது அத்தனை எளிதான காரியம் அல்ல.  அனைத்து நிர்வாகிகளும் சிறப்பாக செயல்பட்டார்கள்  இதே  எண்ணத்தில்,  இதேவேகத்தல், நாம் இணைந்து ஒத்த கருத்துடன் செயல்பட்டால் இன்னும் இரண்டு வருடத்திற்குள் வணிக சமுதாயத்தினூடே  புகுந்துவிட்ட தீய சக்திகள் புறமுதுகிட்டு ஓடிவிடும். 

அவர்கள்  விதைத்துவிட்ட விஷச்செடிகளை  அழித்துவிடலாம். நம்மில் எந்த விதமான எட்டப்பர்களையும் யூதாஸ்களையும் நுழையவிடாமல் கவனத்துடன் எச்சரிக்கையாக செயல்படவேண்டும். மாவட்ட வாரியாக நிர்வாகிகள் , உங்கள் களங்களை பலப்படுத்துங்கள். பகுதிவாரியாக கிளைகளை அமைத்திடுங்கள். அடிப்படை,உறுப்பினர்களை சேர்த்திடுங்கள். மாவட்டவாரியாக உங்களை எந்த அளவிற்கு  செயல்படுகின்றீர்களோ அந்த அளவிற்கு நமது பேரவை பலமாக திகழும்.  வாருங்கள் இன்னும் உழைப்போம். வானம் எட்டிவிடும் தூரம்தான் என்று குறிப்பிட்டார்..


Top