logo
புதுகை இயற்கை விவசாய உற்பத்தியாளர் நிறுவத்தை பார்வையிட்ட எம்.பி. திருநாவுக்கரசர்

புதுகை இயற்கை விவசாய உற்பத்தியாளர் நிறுவத்தை பார்வையிட்ட எம்.பி. திருநாவுக்கரசர்

25/Nov/2020 07:21:31

புதுக்கோட்டை:  புதுக்கோட்டையில் தமிழக விவசாயிகளுக்கு முன்மாதிரியாக  இயங்கி வரும் இயற்கை விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்தை திருச்சி மக்களவை உறுப்பினர் சு. திருநாவுக்கரசர் (24.11.2020) செவ்வாய்கிழமை நேரில் பார்வையிட்டார்.

புதுக்கோட்டை இயற்கை விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு வருகை தந்த  திருநாவுக்கரசர் கம்பெனியின் செயல்பாடுகளை கேட்டறிந்து, மேம்படுத்த தேவையான ஆலோசனைகளை தெரிவித்ததுடன், சிறப்பாக செயல்படுவதை பாராட்டி, வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில்,  கம்பெனியின் இயக்குனரும், இந்திய விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளருமான ஜி.எஸ். தனபதி, நிர்வாக இயக்குனர் ஏ. ஆதப்பன்,  இயக்குனர் விஜயா, முதன்மை செயல் அலுவலர் அகிலா பாரதி, தமிழக காங்கிரஸ் செய்தி தொட்பாளர் பெனட் அந்தோணிராஜ், வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி. முருகேசன், மாவட்ட காங்கிரஸ் செயலாளர், வி.ராஜசேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Top