24/Nov/2020 07:43:45
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் வேளாண் குறைதீர்க்கும் கூட்டம் மாதம் ஒருமுறை ஆட்சியர் தலைமையில் நடைபெற்று வந்தது. கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேளாண்குறைதீர் கூட்டம் மீண்டும் காணொலி காட்சி வாயிலாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை ஆட்சியர் சி. கதிரவன் தலைமையில் வேளாண் குறைதீர்க்கும் கூட்டம் காணொலிக் காட்சி மூலமாக நடைபெற்றது. ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியக் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு ஒன்றியத்திலும் உள்ள உதவி இயக்குனர் அலுவலகத்தில் விவசாயிகள் பங்கேற்று காணொலிக் காட்சி மூலமாக தங்களது கோரிக்கைகளை ஆட்சியரிடம் தெரிவித்தனர்.