logo
கார்த்திகை தீப திருவிழா விற்பனைக்காக அகல் விளக்கு  உற்பத்தி  தீவிரம்

கார்த்திகை தீப திருவிழா விற்பனைக்காக அகல் விளக்கு உற்பத்தி தீவிரம்

23/Nov/2020 11:15:51

ஈரோடு:கார்த்திகை தீப திருவிழா விற்பனைக்காக ஈரோடு பச்சப்பாளியில் மண் விளக்கு உற்பத்தி தீவிரமாக நடக்கிறது.

கார்த்திகை தீபத் திருவிழா வருகிற, 29-இல் கொண்டாடப்படுகிறது. உலகெங்கிலும் வாழும் ஹிந்துக்களின் வீடுகள், கோவில்களில் ஆயிரக்கணக்கில் விளக்கு ஏற்றி வாழிபடுவது வழக்கம். இதற்கு பழைய விளக்குகளை பயன்படுத்த மாட்டார்கள். புதிய மண் விளக்குகளுக்கு தேவை அதிகரித்துள்ளது.

கார்த்திகை தீப விழாக்கு தேவையான அகல் விளக்குகளை  விற்பனை செய்வதறகாக ஈரோட்டில்  பச்சபாளி, கொல்லம்பாளையம், நஞ்சை ஊத்துக்குளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் களி மண் விளக்குகள் உற்பத்தி செய்யப்படுவது வழக்கம். இதில், கொல்லம்பாளளையம், ஊத்துக்குளி பகுதியில் இவ்வாண்டு உற்பத்தி செய்வோர் இடம் பெயர்ந்து சென்று விட்டனர்.பச்சப்பாளியில் மட்டும் பரம்பரியமாக விளக்கு உற்பத்தி செய்யும் சிலர் மட்டும் இதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து பச்சபாளி மண் விளக்கு உற்பத்தியாளர் ஒருவர் கூறியதாவது:

கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு ஒரு மாதம் முன்பே ஆர்டர்கள் குவியும் தற்போது அவ்வாறு இல்லை.  மூலப்பொருள் சரிவர கிடைப் பதில்லை.  மூலப்பொருள் கிடைத்தாலும், உழைப்பு ஏற்ற சரியான லாபம் இல்லை. தொடர் மழை, பனிப்பொழிவு உள்ளிட்ட காரணங்களால், மண்ணை பதப்படுத்தி சக்கரத்தில் ஏற்ற முடியவில்லை.

மழை இல்லாத வெயில் அடிக்கும் நேரத்தில் மட்டுமே சிறிய அளவில் மண் விளக்கு உற்பத்தி செய்யப் படுகிறது. மூலப் பொருள், மின்சார கட்டணம், ஆள் கூலி இவை அனைத்தும் சேர்ந்து கணக்குபார்த்தால் கட்டுபடியாகாது. இருந்தாலும்  பரம்பரிய தொழில் என்பதால் விடாமல் செய்து வருறோம். நுாறு எண்ணிக்கை கொண்ட சிறிய தீப விளக்கு, 100 ரூபாயிக்கு விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்

Top