logo
தேர்தல் ஆயத்தம் அ.தி.மு.க. ஆலோசனை: கூட்டணி வியூகம் பற்றி விவாதம் அமித்ஷா  வருகை காரணமா?

தேர்தல் ஆயத்தம் அ.தி.மு.க. ஆலோசனை: கூட்டணி வியூகம் பற்றி விவாதம் அமித்ஷா வருகை காரணமா?

21/Nov/2020 04:12:33

சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில் ஒருங்கிணைப் பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப் பாளரான முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அதற்கான ஆயத்தப் பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் முடுக்கி விட்டுள்ளன. அந்த வகையில், ஆளும் அதிமுக கட்சி, மீண்டும் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் தேர்தல் பணியாற்றி வருகிறது.

இந்த நிலையில், அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் முக்கிய நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், மண்டல பொறுப் பாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்தத் தேர்தலில் முன்னெடுத்துக் கொண்டு செல்ல வேண்டிய விஷயங்கள் மற்றும் தேர்தல் கூட்டணி, பிரச்சாரத்தை எப்போது தொடங்குவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்ட தாக தெரிகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தமிழகம் வர உள்ள நிலையில், நேற்று நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


 


Top