20/Nov/2020 10:56:25
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் ஜேசிஐ சார்பில் ஏழைக்குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கீரமங்கலம் ஜேசிஐ மற்றும் புதுக்கோட்டை மாவட்ட கால்நடை செயற்கை முறை கருவூட்டல் சங்கம் இணைந்து ஏழை குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு கீரமங்கலம் ஜேசிஐ தலைவர் கலைக்கண்ணன் தலைமை வகித்தார். ஆலங்குடி சட்டப்பேரவை உறுப்பினர் சிவ.வீ.மெய்யநாதன் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கினார். விழாவில் ஜேசிஐ மண்டலத்தலைவர் பிரதாப் சேது, மண்டல இயக்குநர்கள் விஜயராஜா, ஜெயபிரதாப், கார்த்திக் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியினை குருகுலம் பள்ளியின் தாளாளர் சிவநேசன் தொகுத்து வழங்கினார். திட்ட இயக்குநர் முத்து நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார். பழனியப்பன் நன்றியுரையாற்றினார்.