logo
பாலியல் வன்முறையில் கொலையுண்ட  திண்டுக்கல் சிறுமியின் குடும்பத்துக்கு  புதுக்கோட்டை மாவட்டம் சார்பில் திரட்டப்பட்ட நிதியளிப்பு...

பாலியல் வன்முறையில் கொலையுண்ட திண்டுக்கல் சிறுமியின் குடும்பத்துக்கு புதுக்கோட்டை மாவட்டம் சார்பில் திரட்டப்பட்ட நிதியளிப்பு...

20/Nov/2020 04:59:23

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை சரகம் ஜி குரும்பபட்டி யில் வசிக்கும் முடி திருத்தும் தொழிலாளியின் அன்பு மகள் 12 வயது சிறுமி கலைவாணி பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்த நபர்களை போதிய ஆதாரம் இல்லை என்று விடுதலை செய்த நீதித்துறையையும் முறையாக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யாத காவல்துறையை வன்மையாக கண்டித்து தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் தனியாக மேல்முறையீடு வழக்கு செய்வதாக முடிவு எடுத்து நீதியை நிலைநாட்ட மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களும் ஒன்று சேர்ந்து நிதி திரட்ட தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி,  திரட்டப்பட்ட  ரூ. 10,08,671( பத்து லட்சத்தி எட்டாயிரத்து 671) நிதியானது பாதிக்கப்பட்ட கலைவாணியின் குடும்பத்தினரின்  குடும்ப மருத்துவ செலவு  மற்றும்   நீதிமன்ற மேல்முறையீடு வழக்கு தொடுத்து  நியாயம் கிடைக்கும் வரை போராடுவதற்காக  வழங்கப்பட்டது.

 இதில், புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து திரட்டப்பட்ட  ரூ.1,00,200( ஒரு லட்சத்தி 200) நிதியும் கலைவாணி குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் நீதி கிடைக்கும் வரை இந்த புதுக்கோட்டை மாவட்டத்தில்  பல அறப்போராட்டங்களை நடத்தவுள்ளதாகவும், விரைவில் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் மருத்துவர் சமூக நலச் சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் நலச் சங்கம் மாபெரும் நீதி கேட்கும் போராட்டத்தை நடத்தப்படும்  என்றும் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட அமைப்புச் செயலாளர் எம்.பி. முத்து தெரிவித்தார் .

Top