logo
10 பிளஸ்-2 பொதுத்தேர்வு நடத்துவது குறித்து டிசம்பரில் முடிவு செய்யப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

10 பிளஸ்-2 பொதுத்தேர்வு நடத்துவது குறித்து டிசம்பரில் முடிவு செய்யப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

18/Nov/2020 09:57:56

ஈரோடு: கோபி அருகில் உள்ள பாரியூர் ஊராட்சியில் அனைத்து இல்லங்களுக்கும் குடிநீர் வழங்கும் திட்டத்தின் பூமிபூஜை விழாவில் பங்கேற்ற தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அந்தத் திட்டத்தை தொடங்கி வைத்து  நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது:இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதல் முறையாக மருத்துவ படிப்பில்  அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு கலந்தாய்வு நடைபெறுகிறது. இதில் அரசு பள்ளி மாணவர்கள் 313 பேர் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.92 பேர் மருத்துவ படிப்பை படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

 ஈரோடு மாவட்டத்தில் இருந்து 55 மாணவர்கள் கவுன்சிலிங்கில் இடம் பெறுகின்றனர். முதல்வர் எடுத்திருக்கிற இந்த திட்டம் இந்தியாவிற்கே வழிகாட்டியாக திகழ்கிறது. கோபி தொகுதியில் 8 ஊராட்சிகளில் 15.72 கோடி மதிப்பில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாவட்டத்தில் ரூ.118 கோடி மதிப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

 அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிதிக்கு ஏற்ப நிரப்பி வருகிறோம். பட்டய கணக்காளர் பயிற்சி டிசம்பர்மாதம் இறுதிக்குள் விண்ணப்பம் பெற்று, ஜனவரியில் பயிற்சி தொடங்கப்படும். இந்த ஆண்டு பிளஸ்-1 படிக்கும் போதே பயிற்சி அளிக்கப்படும். போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் மீது தொடரப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவது தொடர்பாக அரசுதான் முடிவு செய்ய வேண்டும். 

நான் தனியாக முடிவு செய்ய முடியாது. ஐ.ஐ.டி., ஜே.ஈ.ஈ. பயிற்சி அளிக்கும் நிறுவனம்  திங்கட்கிழமை வர உள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்து, பயிற்சியை அவர்கள் இலவசமாக அளிப்பதாக இருந்தால் மட்டும் இருந்தால் மட்டுமே அந்த நிறுவனத்துடன்  இணைந்து பயிற்சி அளிக்கப்படும். விலாங்கோம்பை பகுதிமக்களுக்கு தேவையான வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றார்.


Top