17/Nov/2020 08:30:47
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் ரூ.28லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகளை எம்எல்ஏ -க்கள் தொடங்கி வைத்தனர்.
ஈரோடு குயிலாந்தோப்பு பொன்னுசாமி வீதியில் ரூ.13லட்சம் மதிப்பீட்டில் கிழக்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட உள்ளது. இதற்கான கட்டுமான பணிகளை பூமி பூஜையுடன் கிழக்கு தொகுதி எம்எல்ஏ., தென்னரசு, மேற்கு தொகுதி எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதேபோல், கருங்கல்பாளையம் காவேரிக்கரை பகுதியில் ரூ.7லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை, வீரப்பம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் ரூ.8லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் கற்கள் மூலம் தளம் அமைக்கும் பணிகளையும் எம்எல்ஏ -க்கள் தொடங்கி வைத்தனர்.
இதில், ஈரோடு மாநகராட்சி ஆணையர் மா. இளங்கோவன், பகுதி செயலாளர்கள் கேசவமூர்த்தி, முருகுசேகர். தங்கமுத்து, மாணவர் இணை செயலாளர் நந்தகோபால், மாவட்ட ஜெ பேரவை இணை செயலாளர் வீரக்குமார், ஆவின் துணைத் தலைவர் குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.