10/May/2020 10:45:31
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே சாராயம் காய்ச்சுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 90 லிட்டர் ஊறலை ஞாயிற்றுக்கிழமை போலீசார் பறிமுதல் செய்து அழித்தனர்.
ஆலங்குடி அருகில் உள்ள மாங்காடு பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து வடகாடு காவல் ஆய்வாளர் பரத் ஸ்ரீநிவாஸ் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது,அங்குள்ள குளத்து பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக புதைத்து வைக்கப்பட்டிருந்த
பேரலை பறிமுதல் செய்து அதிலிருந்த சுமார் 90 லிட்டர் ஊறலை அழித்தனர்.
மேலும்,தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.