15/Nov/2020 10:14:49
ஈரோடு: கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விவசாய விளை நிலங்களின் வாழ்வாதாரம் உள்ளது. பவானிசாகர் அணை 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
இங்கு கடந்த சில நாட்களாக மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. தற்போது நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பொழிவதால் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.மேலும் அணைக்கு வரும் நீர்வரத்து காட்டிலும் பாசனத்திற்கு அதிக அளவு தண்ணீர் திறந்துவிட அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
15.11.2020 காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 95.50 அடியாக சரிந்தது அணைக்கு வினாடிக்கு ஆயிரத்து 882 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 800 கன அடியும் கீழ்பவானி வாய்க்காலுக்கு 2,300 கோடி என மொத்தம் 3 ஆயிரத்து 100 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.