logo
ஊரடங்கிலும் பள்ளியை  பிரியாத ஆசிரியை:  வாட்ஸ்அப் குழுவால் உற்சாகம் அடைந்த  மாணவர்கள்.

ஊரடங்கிலும் பள்ளியை பிரியாத ஆசிரியை:  வாட்ஸ்அப் குழுவால் உற்சாகம் அடைந்த மாணவர்கள்.

06/May/2020 09:02:10

கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சூழலில், பள்ளி மாணவர்கள் தங்கள் குடும்பத்தினரோடு  படம் பார்த்தல், விளையாட்டு போன்ற பொழுதுபோக்குகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே கவரப்பட்டி அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியை மீனா ராமநாதன் பள்ளி மாணவர்களுக்காக தொடங்கியுள்ள சின்னக்குயில் எனும் வாட்ஸ்அப் குழுவானது ஊரடங்காலும்  இடைவிடாது இயங்கிக்கொண்டு இருக்கிறது.

அதில், வாசிப்பு, எழுத்து பயிற்சி, ஓவியம் வரைதல், விழிப்புணர்வு பாடல் பாடுவது என ஒவ்வொரு மாணவர்களும் தனித்திறமைகளால் அசத்தி வருகின்றனர்.

அவற்றில் உள்ள நிறை, குறைகளை ஆசிரியர் மீனா ராமநாதன் அவ்வப்போது சுட்டிக்காட்டுகிறார். இதனால், அந்த குழுவானது வகுப்பறைபோன்று நடைபெற்று வருகிறது.


இது குறித்து ஆசிரியர் மீனா ராமநாதன் கூறியதாவது:

ஒரு ஆண்டுக்கும் மேலாகவே பள்ளி மாணவர்களுக்காக சின்னக்குயில் எனும் வாட்ஸ்அப் குழுவை செயல்படுத்தி வருகிறோம். அதில், பெற்றோர்களின் செல்போன்களைத்தான் மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். முன்பெல்லாம் எப்போதாவதுதான் அவர்களுக்கு செல்போன் கிடைக்கும்.ஆனால், தற்போது அனைவரும் வீட்டிலேயே இருப்பதால் மாணவர்களும் இந்த வாட்ஸ்அப் குழுவை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.அதில்

குரல் பதிவாகவும், எழுத்தாகவும் பதிவிடுகின்றனர். மேலும், ஓவியம் வரைந்தும், தாள்களில் எழுதியும் பதிவிடுகின்றனர்.பாடல் பாடுவது, பேச்சு,  

கவிதை, விடுகதை, மருத்துவக் குறிப்பு, சமையல் குறிப்பு, படம் வரைதல், கைவிணை பொருட்கள் செய்தல் போன்ற திறமைகளையும் மாணவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். எந்நேரமும் மாணவர்கள் உற்சாகமாக இயங்கி வருகின்றனர்.

நாங்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு இடங்களில் இருந்தாலும் அனைவரும் வகுப்பறையில் இருப்பதைப்போன்றே உணர்கிறோம்.இந்த செயல்பாடலானது பள்ளி மீண்டும் தொடங்கியபோது நல்ல உற்சாகத்தொடு செயல்பட வைக்கும் என நம்புகிறோம் என்றார். 

Top