logo
தீபாவளி திருநாள் இருள் விலகி ஒளி பிறக்கும் நாளாகக் கருதப்படுகிறது- அதிமுக தலைமை வாழ்த்து

தீபாவளி திருநாள் இருள் விலகி ஒளி பிறக்கும் நாளாகக் கருதப்படுகிறது- அதிமுக தலைமை வாழ்த்து

12/Nov/2020 11:31:05

சென்னை: தீபாவளி திருநாள் இருள் விலகி ஒளி பிறக்கும் நாளாகக் கருதப்படுகிறது என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி  ஆகியோர்   தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து இருவரும் கூட்டாக வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், இல்லங்கள் தோறும் தீப ஒளி ஏற்றி, இருள் அகற்றி தீபாவளி திருநாளை மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடி மகிழும் மக்கள் அனைவருக்கும் எங்களது இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

நரகாசுரன் என்னும் கொடிய அரக்கலை மகாலட்சுமி துணையுடன் திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாள், இருள் விலகி ஒளி பிறக்கும் தினமாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் சுடர்விட்டு பிரகாசிக்கும் தினமாகவும் மக்களால் கருதப்படுகிறது.

தீபாவளித் திருநாளன்று மக்கள் அனைவரும் காலையில் எழுந்து, எண்ணெய் குளியல் செய்து, புத்தாடைகள் அணிந்து, வளமான வாழ்விற்கு இறைவனை வழிபட்டு பட்டாசுகளை வெடித்து, உற்றார் உறவினர்களுடன் ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறிக்கொள்வதோடு, பரிசுகளையும் தந்து, பெரியோரை வணங்கி வாழ்த்து பெற்று, தீபாவளி பண்டிகையைக் கொண்டாடி மகிழ்வார்கள்.

கடந்த பல மாதங்களாக கொரோனா பெருந்தொற்றால் அஞ்சிக் கிடந்த உலகுக்கு கொரோனாவுக்கான ஆற்றல்மிகு தடுப்பூசி கண்டுபிடித்தாகிவிட்டது என்ற நல்ல செய்தி வரும் வேளையில், மக்களுக்கெல்லாம் புது நம்பிக்கையும் உற்சாகமும் ஏற்பட்டிருப்பது அனைவருக்கும் நிம்மதியும், நம்பிக்கையும் தருவதாக உள்ளது.

தன்னலமும், அரக்க நாமும் கொண்டு அதிகாரம் செய்ய நினைப்போரை தர்மம் தண்டித்து, நியாமத்தையும், சமாதானத்தையும் நிலைநாட்டும் பண்டிகைதானே தீபாவளி அடுத்த சில மாதங்களில் தமிழ் நாட்டு மாங்கல், தீய சக்திகளின் ஆணவத்தை அழித்து, தொடர்ந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்போற்றக் கழகத்தின் அம்மாவின் நல்லாட்சி நடைபெறும் வகையில் இந்த தீபாவளிக்கு ஏற்றப்படும் ஒளி நிலைத்திருக்கட்டும்.

உலகெங்கும் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடி மகிழும் அனைவருக்கும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது வழியில், எங்களது தீபாவளித் திருநாள் வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை அன்போடு தெரிவித்து மகிழ்கிறோம். இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்


Top