logo
ஈரோடு மாவட்டத்தில் நாளை  திரையரங்குகள்  திறக்க முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

ஈரோடு மாவட்டத்தில் நாளை திரையரங்குகள் திறக்க முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

10/Nov/2020 12:11:41

ஈரோடு:கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழகத்தில் உள்ள தியேட்டர்கள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளது. தற்போது கொரோனா  வைரஸ் தாக்கம் சற்று குறைய தொடங்கி உள்ளதால் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, நாளை முதல் தியேட்டர்களில் திறக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.

இதற்காக அரசு பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி சமூக இடைவெளி விட்டு இருக்கைகள் அமைக்கப்படவேண்டும் முக கவசம் அணிந்து வரவேண்டும், உடல் வெப்பநிலையை கண்டறியும் வகையில் தியேட்டருக்கு வரும் மக்களுக்கு தேர்மல் ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்ய வேண்டும். தியேட்டர் நுழைவாயில் கையில்  கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்த வேண்டும் உட்பட பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதையொட்டி  நேற்று திரையரங்குகளில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 35 தியேட்டர்கள் மாவட்டம் முழுவதும் உள்ளன இதில் மாநகர் பகுதியில் 11 தியேட்டர்கள் உள்ளன. நாளை தியேட்டர்கள் திறக்கப்பட உள்ளது ஒட்டி முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தியேட்டர்களில் சமூக இடைவெளி கடைபிடிக்கும் வகையில் இருக்கைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. தியேட்டர் முழுவதும் கிருமிநாசினி மூலம் சுத்தப் படுத்தப் பட்டுள்ளன. நாளை புது படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாததால் ஏற்கனவே தயாராக உள்ள படங்கள் திரையிடப்பட உள்ளது.பொதுவாக  நாள் ஒன்றுக்கு 4 காட்சிகள் திரையிடப்படும். ஆனால் நாளை மூன்று காட்சிகள்  திரையிட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. 


                                                                               


Top