03/Nov/2020 11:07:12
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோரிக்கைகள்: திருமயம் பெல் (பாரத மிகு மின் நிறுவனம்) நிறுவனத்தை தனி யூனிட்டாக மாற்ற வேண்டும். நிறுவனத்தின் பணியாளர்களுக்குக் குடியிருப்பு, பள்ளி, போக்குவரத்து வசதியை ஏற்படுத்த வேண்டும். பணபலன்களை உடனே வழங்க வேண்டும்.
கரோனாவைக் காரணம் காட்டி பணியாளர்களிடம் இருந்து உணவுக்காக அதிக கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும். நிறுவனத்தினர், தொழிற்சங்கத்தினர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்படுகின்றன.
இதில், பெல் தொழில்சாலையின் பிபியுடிஎஸ், ஐஎன்டியுசி, சிஐடியு, எல்பிஎப் ஆகிய தொழிற்சங்கத்தைச் சேர்ந்தோர் பங்கேற்றனர். தொழிற்சங்கங்களின் பொதுச் செயலர்கள் டி. பழனிசாமி, என். குமரேசன், பி. பெருமாள், பி. இளையராஜா உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப்பேசினர்.