logo
நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் சில நாள்கள் தொடங்கப்படும்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் சில நாள்கள் தொடங்கப்படும்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

31/Oct/2020 04:25:53

ஈரோடு:   நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் ஆன்லைன் மூலம் அடுத்த சிலநாள்களில் தொடங்கப்படும் என்றார் தமிழகத பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்.

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குள்பட்ட லக்கம்பட்டி பேரூராட்சியில் ரூ.1.70 கோடி மதிப்பிலான 3 லட்சம் லிட்டர்ர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி கட்டும் பணிக்கு பூமி பூஜையை தொடக்கி வைத்து செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:

நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்படும். நேற்று முன்தினம் வரை 9 ஆயிரத்து 848 பேர் பயிற்சிக்காக பதிவு செய்திருந்தனர். தொடர்ந்து நேற்று கூடுதலாக 20 ஆயிரம் மாணவர்கள் பயிற்சிக்காக பதிவு செய்துள்ளனர்.

இது எந்த அளவுக்கு அரசுப் பள்ளி மாணவர்களிடையே நீட் தேர்வுக்கு தேர்ச்சி பெற வேண்டும் மருத்துவராக வேண்டும் என்ற  ஊக்கத்த்தையும் விழிப்புணர்வையும் உருவாகியுள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

நேற்று தமிழக ஆளுநர்  அரசு பள்ளி மாணவ மாணவியருக்கு மருத்துவக்கல்லூரிகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டு மசோதாவுக்கு  அனுமதி அளித்துள்ளார். இதில் தமிழக முதலமைச்சரை பாராட்டியுள்ளார். இந்த அரசு சட்டத்தின் மூலம் 303 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு 5.25 லட்சம் மாணவ, மாணவிகள் அரசு பள்ளியில் கூடுதலாகச் சேர்ந்துள்ளனர். தற்பொழுதுள்ள சுற்றுச்சூழலில் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை. திறந்தவெளியில் பள்ளிகளை நடத்தினால் மாணவ மாணவிகள் வெயிலிலும் பனியிலும் பாதிக்கப்படுவார்கள். எனவே அதற்கான வாய்ப்பு இல்லை.

லக்கம்பட்டி பேரூராட்சியில் ரூ.13.74 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள் இதுவரை நடந்துள்ளன. மேலும், ரூ.5 கோடி மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருகின்றன. 1,500 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. மேலும், 1,700 பேருக்கு இணைப்பு வழங்கப்படும்.

பேரூராட்சி பகுதியில் உள்ள எல்லாம்காட்டு பாளையம் பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பிலான சுகாதார துணை நிலையம்  ஒன்று திறக்கப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் செங்கோட்டையன். இதில், கோபி கோட்டாட்சியர் ஜெயராமன், ஒன்றிய செயலாளர் மனோகரன், நம்பியூர் ஒன்றிய செயலாளர் தம்பி என்கிற சுப்ரமணியம், மாவட்ட பால்வளத் தலைவர் காளியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 


Top