About Us
Contact Us
Toggle navigation
செய்திகள்
தமிழகம்
இந்தியா
கழுகுப்பார்வையில்
சிறப்பு செய்திகள்
ஆராய்ச்சிமணி
கோரிக்கைகள்
மோதி விளையாடு
விளையாட்டு செய்திகள்
இறையருள் தேடி
ஆன்மீகம்
யாவரும் நலம்
ஆரோக்யம்
தண்டோரா
அறிவிப்புகள்
உயிர்நாடி
வேளாண்மை
திரைப்பாக்கம்
சினிமா
Home
உயிர�நாடி
பொதுவான செய்திகள்
23/Aug/2021 12:29:58
மணிப்பூர் மாநில ஆளுநராக இல.கணேசன் நியமனம் செய்யப்பட்டார் தமிழகத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் மணிப்பூர் மாநில ஆளுநராக நியமனம் செய்து குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார். தமிழ் நாட்டைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதியான இல.கணேசன் மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைவரான இல.கணேசன், மணிப்பூர் மாநில ஆளுநராக, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களால் ஞாயிற்றுக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 78. சிக்கிம் மாநில ஆளுநர் கங்கா பிரசாத், மணிப்பூர் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பை வகித்து வந்த நிலையில், தற்போது புதிய ஆளுநராக இல.கணேசன் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் தமிழக பாஜக தலைவரான இல.கணேசன், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஆர்.எஸ்.எஸ் பின்னணியைக் கொண்ட இவர், பாஜக தேசிய குழு உறுப்பினராக இருந்துள்ளார். இவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த பாஜக தலைவர்களுக்கு அடுத்தடுத்து பல்வேறு முக்கிய பதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. முன்னதாக, தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை செளந்தரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இப்போது அவர் புதுச்சேரி யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வருகிறார். அடுத்ததாக, பாஜக தலைவராக இருந்த எல்.முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. தற்போது இல.கணேசன் மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
21/Jan/2021 12:26:28
ஈரோடு காரை வாய்க்கால், சின்ன மாரியம்மன் கோயில்களில் கும்பாபிஷேக விழா
21/Mar/2020 03:51:27
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு பேரவையில் முதல்வர் அறிவிப்பு:
14/May/2020 12:13:51
மத்திய அரசின் அறிவிப்பில் பசிக்கு பதில் இல்லை: ப.சிதம்பரம்.
24/Nov/2020 10:23:19
லாரி மோதியதில் அரசுப் போருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து: பயணிகள் 35 பேர் காயம்
Top