logo
இந்திய தபால் துறையை ஆதரிப்போம்.. அதிலுள்ள  சேவைகளை அறிந்து கொண்டு..

இந்திய தபால் துறையை ஆதரிப்போம்.. அதிலுள்ள சேவைகளை அறிந்து கொண்டு..

30/Oct/2020 08:43:25

தனியார் நிறுவனங்கள் தங்கள் ஆரம்பகாலத்தில் குறைந்த விலையில் நல்ல சேவையாற்றி வந்தன.ஆனால் தற்போது அவை தாறுமாறாக கட்டணங்களை ஏற்றி நம்மை சுரண்டி வருகின்றன.

கொரோனா காலத்தில் கூரியர் கம்பெனிகள் தங்களது சேவையை முற்றிலுமாக நிறுத்திக் கொண்டன.ஆனால் நம் தபால்துறை ஆனது கொரோனா காலத்திலும் தன் பணிகளை வழக்கம்போல் செய்தது.தற்போது உள்ள கட்டண நிலவரப்படி நம் தபால் துறையே குறைந்த கட்டணத்தில் சேவை செய்து வருகிறது 

லும், இந்திய அஞ்சல் துறையின் ஒரு சிறப்பான சேவை: நண்பர்களே தபால்  துறையில் பதிவு தபால்( REGISTERED POST)மற்றும்  சாதாரண(NORMAL POST) தபால்  சேவையை நாம் வழக்கமாக பயன்படுத்துகிறோம். 

அநேகம் பேர் அறியாத  ஒரு மகத்தான  சேவை உள்ளது. அதன் பெயர் REGISTERED PARCEL மற்றும் UN- REGISTERED PARCEL. அதன் கட்டண விவரங்கள் குறிப்பிடுகிறோம். Registered parcel அனுப்ப  Registered charges ரூ.17.அரை கிலோவுக்கு  ரூ.19  ஆக மொத்தம் ரூ.36/- மட்டுமே. அதற்கு மேல் ஒவ்வொரு அரை கிலோவிற்கு ரூ.16 மட்டுமே. இதனை பயன்படுத்துங்கள். 1kg. ரூ.52. 2kg ரூ.84. Un-registered Parcel அரை கிலோவிற்கு  ரூ.19 மட்டுமே. அதற்கு மேல் ஒவ்வொரு அரை கிலோவிற்கும் ரூ.16 மட்டுமே.  1kg ரூ. 35. 2 kg ரூ.67.

இதையே நீங்கள் பதிவு  தபாலில் அனுப்பினால்..   registered Charges ரூ.17 .முதல் 20 கிராம்  ரூ.5  மொத்தம் ரூ.22.அடுத்து ஒவ்வொரு 20 கிராமுக்கும் ரூ.5.உதாரணமாக  Registered Post க்கு.. 100 கிராம் ரூ. 42.  500 கிராம் ரூ.142 .Normal post... 20 கிராம்  ரூ.5 .அதற்கு மேல் ஒவ்வொரு  20 கிராமுக்கும்  ரூ.5.உதாரணமாக, 100 கிராம்  ரூ 25. 500 கிராம்  ரூ.125 . தனியார் தபால் சேவையை விட மிக குறைவான கட்டணம் மாநிலத்திற்குள் 3 நாட்களில் சென்று விடுகிறது. பயன்படுத்தி பலனடையுங்கள். குறிப்பு: தனியார் தபால் சேவை மூலம் கிராம பகுதிகளுக்கு தபால் அனுப்ப முடியாது. அஞ்சல் துறை மூலம் கிராமத்திற்கும் தபால் அல்லது பார்சல் அனுப்ப முடியும். 


                                                   

        


Top