logo
8-ஆவது நாளாக தொடரும் தமிழ் மாநில வருவாய் துறை அலுவலர் சங்கத்தினரின்  காத்திருப்பு போராட்டம்

8-ஆவது நாளாக தொடரும் தமிழ் மாநில வருவாய் துறை அலுவலர் சங்கத்தினரின் காத்திருப்பு போராட்டம்

30/Oct/2020 08:03:07

புதுக்கோட்டையில் நிரந்தர துணை வட்டாட்சியர் பட்டியலை வெளியிடாத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து தமிழ் மாநில வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்  8-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை வருவாய் மாவட்டத்தில் வருவாய் நிர்வாக ஆணையர் அறிவிப்பின்படி நேரடி நியமன உதவியாளர மற்றும் பதவி உயர்வு உதவியாளர்களுக்கு இடையே பணி முதுநிலை பட்டியல் கடந்த 7.10.2020-ஆம் தேதி மாவட்ட வருவாய் அலுவலரால் வெளியிடப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக நிரந்தர துணை வட்டாட்சியர் பட்டியல் வெளியிடாததற்கு காரணமாக உள்ளவர்கள் தற்போது வெளியிடப்பட்ட பணி முதுநிலை பின்பற்றி நிரந்தர துணை வட்டாட்சியர் பட்டியல் வெளியிட கூடாது என மாற்று வருவாய் சங்கத்தில் உள்ளவர்கள் செயல்பட்டு வருவதாகவும்.

மேலும் அந்த சங்கத்தினருக்கு ஆதரவாக மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் மேலும் முதுநிலை பட்டியல் வெளியீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆனால் மாற்று சங்கத்தினர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடராத நிலையில் நிரந்தர துணை வட்டாட்சியர் பட்டியலை மாவட்ட நிர்வாகம் வெளியிட காலம் தாழ்த்தி வருகிறது இதனால் மாற்று சங்கத்தினர் நீதிமன்றத்தில் புதிய தடை உத்தரவு பெற வாய்ப்புள்ளது அதற்கு முன்பாகவே நிரந்தர துணை வட்டாட்சியர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று தொடர்ந்து தமிழ் மாநில வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் வலியுறுத்தி வருவதாகவும் ஆனால் மாவட்ட நிர்வாகம் தங்கள் கோரிக்கையை பரிசிலனை கூட செய்யாமல் நீதிமன்ற தடை உத்தரவை எதிர்பார்த்து காத்திருப்பது கண்டிக்கத்தக்கது.

உடனடியாக முதுநிலை பட்டியல் அடிப்படையில் நிரந்தர துணை வட்டாட்சியர் பட்டியலை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் மாநில வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர்  தொடர்ந்து  8 -ஆவது நாளாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் நிரந்தர துணை வட்டாட்சியர் பட்டியலை வெளியிடும் வரை தொடர்ந்து  காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். 


Top