logo
குறைந்த மதிப்பெண் பெற்ற  அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் கூடுதல் மதிபெண் பெற ஆன் லைன் மூலம் பயிற்சி: அமைச்சர் செங்கோட்டையன்

குறைந்த மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் கூடுதல் மதிபெண் பெற ஆன் லைன் மூலம் பயிற்சி: அமைச்சர் செங்கோட்டையன்

30/Oct/2020 03:48:30

ஈரோடு:  கோபிச்செட்டிபாளைாயம்  வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்திற்கு உள்பட்ட ரேஷன் கடைகளில்  பெரிய வெங்காயம்(கிலோ ரூ.45/-க்கு விற்பனை செய்யும் திட்டத்தின் தொடக்க விழா சங்க வளாகத்தில் இன்று நடைபெற்றது.

 விழாவிற்கு. கோபி  வருவாய் கோட்டாட்சியர்   ஜெயராமன் தலைமை  வகித்தார்.  சங்க தலைவர் காளியப்பன் முன்னிலை வகித்தார். ல் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு பெரியவெங்காய விற்பனையை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து கொங்கர்பாளையம் மற்றும் அரக்கன்கோட்டை பகுதிகளில் ரூ.1.97 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப்பணிகளையும் தொடங்கி வைத்தார். முன்னதாக தேவர் ஜெயந்தியையொட்டி, மொடச்சூரில் உள்ள அவருடைய உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர், நீட் தேர்வில் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு குறைந்த மதிப்பெண் பெற்ற  அரசு பள்ளி மாணவர்கள் கூடுதலாக மதிபெண் பெறுவதற்கு ஏதுவாக ஆன் லைன் மூலம் பயிற்சி பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இந்த ஆண்டு பிளஸ்-2 படித்து கொண்டு நீட் தேர்வுக்கு பயிற்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களோடு இணைந்து பயிற்சியை பெறுவார்கள். இப்போது. 9.438 மாணவர்கள் ஆன் லைன் மூலம் பயிற்சியை பெற முன்வந்துள்ளார்கள் என்றார். 

இந்த நிகழ்ச்சியில், நம்பியூர் ஒன்றிய செயலாளர் தம்பி என்கிற சுப்பிரமணியம், தாசில்தார் தியாகராஜ், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் நவமணிகந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Top