logo
வடகிழக்கு பருவமழையிலிருந்து நெற்பயிர்களை பாதுகாக்க விவசாயிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

வடகிழக்கு பருவமழையிலிருந்து நெற்பயிர்களை பாதுகாக்க விவசாயிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

30/Oct/2020 02:35:43

புதுக்கோட்டை:    வடகிழக்கு பருவமழையிலிருந்து நெற்பயிh;களை பாதுகாக்க விவசாயிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

 இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி  வெளியிட்ட தகவல்: புதுக்கோட்டை மாவட்டத்தில்  தற்போது சம்பா பருவ நெல் சாகுபடி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நடப்பு அக்டோபர் மாதத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதால் சம்பா நெல் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் தங்கள் நெற்பயிரினை வடகிழக்குப் பருவமழையின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் ஆகியவற்றைக் கடைப்பிடித்துப் பயன்பெற வேண்டும். 

இதன்படி  நெற்பயிர் மூழ்குவதைத் தடுத்திட தாழ்வான பகுதிகளை இனம் கண்டு வயல்களில் தண்ணீரினை வடித்திட விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு நடவடிக்கை எடுத்தல் வேண்டும். வயலில் தேங்கும் நீரை ஆழமான வாய்க்கால்கள் அமைத்து வடித்து விட வேண்டும். வடிகால் வாய்க்கால்கள் தண்ணீர் தேங்காமல் வடிந்திடும் வகையில் பொதுப்பணித் துறையினரை அணுகி தக்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

மழைநீரில் மூழ்கியுள்ள பயிர்களை பாதுகாக்க வயலில் தேங்கும் நீரை ஆழமான வாய்க்கால்கள் அமைத்து வடித்து விட வேண்டும். இளம் பயிர்கள் அதிக நாட்கள் நீரின் தேக்கத்தினால் தழை மற்றும் துத்தநாகச் சத்துக்கள் குறைபாடு ஏற்பட்டு இளமஞ்சள் அல்லது மஞ்சளாக மாறும் பட்சத்தில் தண்ணீரை வடித்தவுடன் 2 கிலோ யூரியா மற்றும் 1 கிலோ ஜிங்க் சல்பேட் உரத்தினை 200 லிட்டா; தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் இலைவழி உரமிட வேண்டும். 

பயிர் தண்டு உருளும் பருவம் மற்றும் பூக்கும் பருவத்தில் தண்ணீர்  தேக்கத்தினால் பாதிக்கப்பட்டால் 4 கிலோ டி.ஏ.பி. -யினை 10 லிட்டா; நீரில் முந்தைய நாள் மாலை வேளையில் கரைத்து மறுநாள் வடிகட்டி அதனுடன் 2 கிலோ யூரியாவினை 190 லிட்டா; நீரில் கலந்து மாலை வேளையில் கைத்தெளிப்பான் மூலம் இலைவழி உரமிட வேண்டும். தண்ணீர் தேக்கத்தினால் பயிர்  வளர்ச்சி குன்றி காணப்பட்டால் தண்ணீரை வடித்தவுடன் ஏக்கருக்கு யூரியா 22 கிலோவுடன், ஜிப்சம் 18 கிலோ மற்றும் வேப்பம் புண்ணாக்கு 4 கிலோவினை ஒருநாள் இரவு கலந்து வைத்து 17 கிலோ பொட்டாஷ் கலந்து மேலுரமிட வேண்டும்.

 நெல் பயிh; அதிக நாட்கள் நீரில் மூழ்கும் பட்சத்தில் நெல்குருத்து  ஈ, இலை சுருட்டுப்புழு, பச்சை தத்துப்பூச்சி, குலைநோய், இலை உரை கருகல்நோய் போன்ற பூச்சி மற்றும் நோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது.  இதனை க் கண்டறிந்து தக்க பூச்சி நோய் தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இளம் பயிh;களில் தண்ணீர் தேங்கி அழுகிய நிலை ஏற்பட்டிருப்பின் இருப்பில் உள்ள நாற்றுக்களை கொண்டு ஊடு நடவு செய்ய வேண்டும் அல்லது அதிக குத்துக்கள் உள்ள நடவு பயிரினை கலைத்து பயிர் இல்லாத இடங்களில் நடவு  செய்திட வேண்டும்.

இது தவிர இயற்கை இடர்பாடுகளினால் பயிர் சேதத்தினை ஈடுசெய்திட பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீடு திட்டத்தில் பயிர் காப்பீடு செய்திட வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்குப் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் தங்கள் பகுதி வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை அணுகிப் பயன் வேண்டும். 

Top