logo
புதுக்கோட்டை  மாவட்டத்தில்  விவசாயிகளுக்குத்  தேவையான உரங்கள் மற்றும் விதைகள் கையிருப்பில் உள்ளன: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி

புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகளுக்குத் தேவையான உரங்கள் மற்றும் விதைகள் கையிருப்பில் உள்ளன: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி

30/Oct/2020 12:16:38

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காணொலி மூலம் 29.10.2020) நடைபெற்ற மாவட்ட அளவிலான விவசாயிகள்  குறைகேட்பு கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர்  பி.உமாமகேஸ்வரி  பேசகையில் இத்தகவலை தெரிவித்தார்.

கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:  தமிழக அரசு விவசாயிகளின் நலனுக்காக எண்ணற்ற பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கொரோனா தொற்று காரணமாக விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உரிய பாதுகாப்பு விதிமுறைகளுடன்  மாவட்ட ஆட்சியரகத்தில் காணொலிக் காட்சி வாயிலாக விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெற்றது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் 120 விவசாயிகள் கொரோனா தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி காணொலிக்காட்சி வாயிலாக கலந்து கொண்டனர்.

 புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழையளவு 758.2 மி.மீ. ஆகும். அக்டோபா; மாதம் வரை பெறப்பட வேண்டிய இயல்பான மழை அளவான 545.6 மி.மீ பதிலாக 578.9 மி.மீ அளவு மழைகிடைத்துள்ளது. இது இயல்பைவிட 6 சதவீதம் கூடுதலாகும். அக்டோபர் மாதத்தில் பெறப்பட வேண்டிய இயல்பான மழையளவு 153 மி.மீ ஆகும். ஆனால்; அக்டோபர் மாதத்தில் கிடைத்த மழையளவு 101 மி.மீ இதுவரை பதிவாகியுள்ளது.

 மேலும் ,2020-21 -ஆம் ஆண்டில் செப்டம்பா; மாதம் முடிய நெல் 36,167 எக்டர் பரப்பளவிலும், சிறுதானியங்கள் 1,4737எக்டர் பரப்பளவிலும்,  பயறுவகைப் பயிர்கள் 1,627 எக்டர் பரப்பளவிலும், எண்ணெய்வித்து 7,844  எக்டர் பரப்பளவிலும், கரும்பு  955 எக்டர் பரப்பளவிலும், பருத்தி 25 எக்டர் பரப்பளவிலும், தென்னை 10,795 எக்டர் பரப்பளவிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 33 வேளாண்மை விரிவாக்க மையங்களில் 231.760 மெ.டன் சான்று பெற்ற நெல் விதைகளும், 45.27 மெ.டன் பயறு விதைகளும், நிலக்கடலை 38.62 மெ.டன், சிறுதானியங்கள் 13.065 மெ.டன், எள் விதைகள் 4.046 மெ.டன் விதைகளும் இருப்பில் உள்ளது. விவசாயிகள் தரமான சான்று பெற்ற விதைகளை வேளாண்மை விரிவாக்க மையங்களிலிருந்து பெற்றுச் சாகுபடி செய்யலாம் எனக் கொள்ளப்படுகிறது. விதை விற்பனை உரிமம் பெற்ற கூட்டுறவு மற்றும் தனியார; விற்பனை மையங்களிலும் சான்று பெற்ற விதைகள் வழங்கிடத் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்குத் தேவையான தரமான உரங்கள் தடையின்றி உரிய நேரத்தில் கிடைக்கத் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது யூரியா 3,307 மெ.டன்னும்,   டிஏபி 1,063 மெ.டன்னும்,  பொட்டாஷ் 1,145 மெ.டன்னும்,  காம்ப்ளக்ஸ் 4,250 மெ.டன்னும் இருப்பு வைக்கப்பட்டு கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் உர உரிமம் பெற்ற தனியார்; நிறுவனங்கள் மூலம் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.­ 

விவசாயிகள் உரம் வாங்கச் செல்லும் பொழுது கட்டாயம் ஆதார் அட்டை கொண்டு சென்று தங்களது கைரேகையினை பதிவு செய்து உரம் வாங்கிடவும், மண்வள அட்டையில் பாpந்துரை செய்துள்ள உர அளவினை வாங்கி பயன்பெற வேண்டும்.  புதுக்கோட்டை மாவட்டத்தில் 2020-21 -ஆம் ஆண்டுக்கான சிறப்புப் பருவம் - நெல் (சம்பா) தொடங்கி பயிர்கள் சாகுபடி செய்து வரும் நிலையில், விவசாயிகள் அனைவரும் தாங்கள் சாகுபடி செய்துள்ள நெல்  (சம்பா) பயிர் காப்பீடு செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் இயற்கை இடர் பாடுகளினால் ஏற்படும் மகசூல் இழப்பு மற்றும் இதர பாதிப்புகளிலிருந்து வாழ்வாதாரத்தினையும், வருவாய் இழப்பினையும் சரி செய்துகொள்ள திருத்தியமைக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், நெல் சம்பா பயிருக்கு விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரிமியத் தொகை எக்டேருக்கு ரூ.1,130 ஆகும். காப்பீட்டுத் தவணை தொகை செலுத்துவதற்கு நிர்ணியிக்கப்பட்ட காலக்கெடு 30.11.2020 ஆகும். விவசாயிகள் காப்பீடு செய்ய கடைசி நாள் வரை காத்திராமல் முன் கூட்டியே தேவையான ஆவணங்களுடன் அருகிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், பொதுச் சேவை மையங்கள் ஆகியவற்றில் பதிவு செய்து பயனடைய வேண்டும். எனவே தமிழக அரசின் இதுபோன்ற வேளாண் நலத்திட்டங்களை விவசாயிகள் உரிய முறையில் பெற்று பயன்பெற வேண்டும் என்றார் ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், மாவட்ட ஊரக வளா;ச்சி முகமை திட்ட இயக்குநர் எம்.சந்தோஷ்குமார், வேளாண் இணை இயக்குநர்(பொ) பெரியசாமி, தமிழ்நாடு நுகா;பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் மோகன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Top